fbpx

ரஜினி படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியீடு..!! கொண்டாட தயாராகும் ரசிகர்கள்..!!

ரஜினி நடிப்பில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘பாபா’ திரைப்படம் விரைவில் மறுவெளியீடு செய்யப்பட உள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

கடந்த 2002ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘பாபா’. ரஜினிகாந்த் தயாரித்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். ‘படையப்பா’ படம் வெளியாகி 3 ஆண்டுகளுக்கு பின்னர் ரஜினி நடித்து வெளியான இந்த படம் பெரும் எதிர்ப்பார்ப்பை தூண்டியபோதிலும், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், ‘பாபா’ படத்தை ரஜினிகாந்த் மறுவெளியீடு செய்ய உள்ளார். மீண்டும் எடிட் செய்யப்பட்டு டிஜிட்டல் முறையில் மெரூகூட்டப்பட்ட ‘பாபா’ படம் விரைவில் மறுவெளியீடு செய்யப்பட உள்ளது.

ரஜினி படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியீடு..!! கொண்டாட தயாராகும் ரசிகர்கள்..!!

புதிதாக சில வசனங்களும் படத்தில் சேர்க்கப்பட்டுள்ளதால் அதற்காக சமீபத்தில் ரஜினிகாந்த் டப்பிங் பேசினார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. பாபா மறுவெளியீட்டை கொண்டாட ரஜினி ரசிகர்கள் தயாராகி வரும் நிலையில், அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது.

Chella

Next Post

BB Tamil..!! பிக்பாஸ் அசீம் இப்படிபட்டவரா..? நம்பவே முடியல..!! நடிகை சுபத்ரா ஓபன் டாக்..!!

Sat Dec 3 , 2022
பிக்பாஸ் அசீம் குறித்து நடிகை சுபத்ரா பேசிய கூறிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் ஆரம்பம் முதலே அடாவடியாகவும், அதிகாரத்தை செலுத்தும் போக்குடனும் நடந்து கொண்டு வருகிறார் அசீம். குறிப்பாக, பெண் போட்டியாளர்களை மட்டம் தட்டி பேசுவதும், ஆண் போட்டியாளர்களிடம் திமிராக தள்ளுமுள்ளு சண்டையிட்டு ஒடுக்குவதையும் தொடர்ந்து செய்து வருகிறார். இந்த வாரத்தில் கூட அமுதவாணனை கண்ணத்தில் அடித்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில், நடிகை சுபத்ரா […]
BB Tamil..!! பிக்பாஸ் அசீம் இப்படிபட்டவரா..? நம்பவே முடியல..!! நடிகை சுபத்ரா ஓபன் டாக்..!!

You May Like