விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த 9 ஆம் தேதி தொடங்கியது. இதுவரை ஒளிபரப்பான 5 சீசன்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்தாண்டு ஓடிடி தளத்திற்கென பிரத்யேகமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. பிக்பாஸ் என்றாலே நினைவுக்கு வருவது பிரமாண்ட வீடு தான்.

அந்தவகையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

தற்போது 20 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், பிரபல சீரியல் நடிகை ரக்ஷிதாவும் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற ஒரு டாஸ்கில் ரக்ஷிதாவிடம் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும், உங்களை முதல் முறையாக சீரியலில் தான் பார்த்தேன். அப்போது இருந்தே எனக்கு உங்ளை பிடிக்கும். எனக்கு Girl Friends இல்லை, அதனால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகும் உங்களுடன் இந்த உறவு தொடர வேண்டும் என்று ராபர்ட் மாஸ்டர் கூறினார். வீட்டிற்குள் நுழைந்த இரண்டாவது நாளிலேயே இப்படி ஒரு ரூட்டை பிடித்துவிட்டார் வனிதாவின் முன்னாள் காதலர் ராபர்ட்.