fbpx

ரஜினி பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென மைக்கை பிடுங்கிய ரம்யா கிருஷ்ணன்..!! அரங்கமே சும்மா அரண்டு போச்சு..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று நடந்த ‘ஜெயிலர்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், ரசிகர்கள் சற்றும் எதிர்பாராத பல விஷயங்களை பேசினார். இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தனக்கு கதை சொல்ல வந்தது முதல், காக்கா – கழுகு குட்டிக்கதை, குடிப்பழக்கத்தால் வந்த விளைவு, சூப்பர் ஸ்டார் பட்டம், தன்னை செதுக்கிய இயக்குனர்கள் பட்டியல் என ரஜினிகாந்த் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

குறிப்பாக ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து பேசியபோது, என்றுமே சூப்பர் ஸ்டார் பட்டம் தனக்கு தொல்லை தான். ஹுக்கும் பாடலில் இடம் பெற்ற சூப்பர் ஸ்டார் என்கிற வார்த்தையை கூட நீக்க சொன்னதாக தெரிவித்தார். அப்போது கீழே அமர்ந்து, ரஜினி பேசிக் கொண்டிருப்பதை பார்த்த ரம்யா கிருஷ்ணன் மேடைக்கு ஓடிவந்து, ரஜினிகாந்த் பேசிக் கொண்டிருக்கும் மைக்கை வாங்கி யாரும் எதிர்பாராத விதமாக ‘படையப்பா’ படத்தில் நீலாம்பரி ரஜினிகாந்தை பார்த்து பேசும், “வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்கிட்ட தான் இருக்கும்… கூடவே பொறந்தது எங்கேயும் போகாது”! என பேச கைதட்டல்களால் சென்னை நேரு ஸ்டேடியதையே அதிர வைத்து விட்டது.

மேலும், இதே சூப்பர் ஸ்டார் பிரச்சனை குறித்து கலாநிதிமாறன் பேசும்போது, ரஜினிகாந்த்க்கு 70 வயது ஆகிவிட்டது. இன்னும் அவரை நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் போட்டி போடுகின்றனர். அப்படி உங்களுக்கு 70 வயதாகும்போது உங்களுக்காக, உங்களை நடிக்க வைக்க போட்டி போட்டால்? நீங்கள் தான் சூப்பர் ஸ்டார் என கூறினார்.

Chella

Next Post

11 வயதான சிறுமியை பசுகாவலர் உள்பட சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்..!

Sat Jul 29 , 2023
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது.  ஷ்ரத்தா கொலை வழக்கு நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் இருக்கிறோம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது. ஷர்த்தா கொலை வழக்கின் அதிர்ச்சி அடங்குவதற்குள்ளேயே உத்தரப் பிரதேசத்திலும் மேற்குவங்கத்திலும் அதே போன்ற கொலை கொடூரம் சம்பவங்கள் அரங்கேறின. ராஜஸ்தான் மாநிலத்தில் சிறுமி ஒருவர் உயிரோடு எரிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் […]

You May Like