பாலிவுட் நடிகை ஆலியா பெண் குழந்தையை பெற்றெடுத்த பின்னர் முதன் முதலாக குழந்தையுடன் வீடுதிரும்பும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகின்றது.
ஆலியாபட் – ரன்பீர் கபூர் தம்பதியினர் கடந்த வியாழக்கிழமை பெண் குழந்தையை பெற்றனர். பின்னர் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார்கள். ரன்பீர்-ஆலியா தங்கள் குழந்தையுடன் காரில் வீடு திரும்பும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகின்றது. இந்த புகைப்படத்தில் ரன்பீர் குழந்தையை கையில் வைத்துக் கொண்டிருக்கின்றார். ஆலியாபட் அருகில் அமர்ந்து வருகின்றார். இவர்களுடன் மாமியார் நீது கபூர் உடன் வருகின்றார்.
காதல் தம்பதிகளான ரன்பீர் மற்றும் ஆலியா கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின் கடந்த செப்டம்பர் மாதம் பிரம்மாஸ்திரா திரைப்பட புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட நடிகை ஆலியா பட் பிங் நிற ஆடையணிந்து வந்தார். அந்த ஆடையில், ‘குழந்தை உள்ளது’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. இதன் மூல, தான் கருவுற்றிருப்பதை நடிகை ஆலியா பட் சூசகமாக வெளிப்படுத்தி இருந்தார்.
அக்டோபர் 6ம் தேதி எளியமுறையில் வளைகாப்பு நடந்தது. இதில் ரன்பீருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஆலியாபட் வெளியிட்டிருந்தார். தற்போது குட்டி பிரின்ஸஸ் உடன் காரில் வீடு திரும்பியுள்ளனர்.