ரவீந்தர் – மகாலட்சுமி தம்பதியினரை வைத்து விஜய் டிவி நடத்திய நிகழ்ச்சி, தற்போது பேசுபொருளாகி உள்ளது.
சின்னத்திரை சீரியல் நடிகையாக திகழ்ந்து சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் நடிகை மகாலட்சுமி. இந்த திருமணம் பெரியளவில் பேசப்பட்ட நிலையில், இருவரும் இதை கண்டுகொள்ளாமல் இருந்து வந்தனர். மேலும், தங்களின் திருமணம் பேசப்படுவதை பார்த்து திருமணத்திற்காக விளக்கத்தை கூறுகிறேன் என்று பல ஊடகங்களுக்கு பேட்டிக்கொடுத்து பப்ளிசிட்டி செய்தனர். இந்நிலையில் ஹனிமூன், குலதெய்வ பூஜை என்று இருந்து வந்த இருவரும், பிக்பாஸ் 6 நிகழ்ச்சிக்கு செல்கிறார்கள் என்ற செய்திகளும் கசிந்தது. இந்நிலையில், விஜய் தொலைக்காட்சி எப்போதும் செய்யும் நட்சத்திர திருமணம் என்ற நிகழ்ச்சிக்கு இந்த தம்பதியினரையும் அழைத்துள்ளனர்.

’வந்தாள் மஹாலஷ்மியே’ என்ற சிறப்பு நிகழ்ச்சியில் இருவரும் எப்படி புரிந்து வைத்திருக்கிறார்கள் என்ற டாஸ்கில், இருவரின் செருப்பை கழட்டி கேட்கும் கேள்விக்கு செருப்பை காட்ட சொல்லியுள்ளனர். இருவரும் மாறிமாறி செருப்பை காட்டும் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். பிரபல தயாரிப்பாளரை இப்படி செருப்பை கொடுத்து நிகழ்ச்சி நடத்தி கேவலப்படுத்திருப்பதை பலர் கண்டித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வேலையை எப்போதும் விஜய் தொலைக்காட்சி விடாது என்றெல்லாம் கூறி வருகின்றனர்.