fbpx

ரெட் ஜெயன்ட் சொத்து மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடியா..? சும்மா போற போக்குல அடிச்சுவிட்டு போறாங்க..!! உதயநிதி கலகல பேச்சு

தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறைக்கு தொடர்புடைய வழிகாட்டுதலை வருங்கால சந்ததியினருக்கு வழங்கும் வகையில் தக்‌ஷின் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. 2023ஆம் ஆண்டிற்கான மாநாடு சென்னையில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதன் துவக்க விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் கார்த்தி, இயக்குனர் வெற்றிமாறன், நடிகை மஞ்சு வாரியர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “தமிழ் திரையுலகில் 2007 முதல் 2022 வரை நான் பயணித்திருக்கிறேன். ரெட் ஜெயண்ட் மூவிஸ் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். 15 படங்கள் நேரடியாகவே தயாரித்திருக்கிறேன். 15-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். அதுதவிர நல்ல நல்ல படங்களை வெளியிட்டும் இருக்கிறேன்.

எனக்கும் ரெட் ஜெயண்ட்டுக்குமான தொடர்பு எல்லாருக்குமே தெரியும். இப்போ கூட ஒரு 3 நாள் முன்னாடி ஒருத்தர், ரெட் ஜெயன்ட் ஓட சொத்து மதிப்பு 2,000 கோடினு சொல்லிருந்தாரு. அத பத்தி நான் பேச விரும்பல. ஒரு தயாரிப்பாளரோட கஷ்டம் என்னன்னு இன்னொரு தயாரிப்பாளருக்கு தெரியும். ரெட் ஜெயன்ட் உடைய மதிப்பு என்னன்னு உங்க எல்லாருக்கும் தெரியும். ஆனா அவங்கெல்லாம் சும்மா போற போக்குல அடிச்சுவிட்டு போறாங்க” என கூறினார்.

உதயநிதியின் பேச்சைக்கேட்டு இயக்குனர் வெற்றிமாறன், காந்தாரா ஹீரோ ரிஷப் ஷெட்டி, நடிகை மஞ்சு வாரியர் ஆகியோர் சிரித்தனர். உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் மதிப்பு ரூ.2,000 என சொன்னது வேறுயாரும் இல்லை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தான். கடந்த சில தினங்களுக்கு முன் DMK Files என்கிற பெயரில் திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட்டிருந்தார். அதில் அவர் சொன்னதை தான் தற்போது தக்‌ஷின் மாநாட்டில் கிண்டலடித்து பேசி இருக்கிறார் உதயநிதி.

Chella

Next Post

”மழலையர் பள்ளிகளை திறக்காதீங்க”..!! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு..!!

Wed Apr 19 , 2023
தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு இடங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. அதன்படி, நேற்று 12 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டி பதிவாகியுள்ளது. கரூர் மாவட்டம் பரமத்தியில் 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்தாண்டில் தமிழ்நாட்டில் இதுதான் அதிகபட்ச வெப்பநிலை. சேலம் 106, ஈரோடு 105, வேலூர், திருச்சியில் தலா 104, திருத்தணி, திருப்பத்தூர், மதுரை நகரில் தலா 103, பாளையங்கோட்டை, தஞ்சையில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் […]

You May Like