ஆபாச ஜோக் சொன்ன ரெஜினாவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருபவர் ரெஜினா. தமிழில் மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மிஸ்டர் சந்திரமௌலி, சக்ரா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் ஷாகினி தாகினி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ரெஜினாவுடன் நிவேதா தாமசும் நடித்துள்ளார். இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் ரெஜினாவும் நிவேதாவும் பங்கேற்றனர்.

அப்போது சாப்பிட்டபடி ஆண்களை பற்றி பேசிக்கொண்டிருந்த ரெஜினா, ஆபாசமான ஜோக் ஒன்றை கூறினார். இதைக் கேட்டு அருகில் இருந்த நிவேதா தாமஸ், தலை குனிந்துகொண்டார். ரெஜினா எந்த சலனமும் இன்றி சிரித்துக்கொண்டிருந்தார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதைக்கேட்டு நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்து, ரெஜினாவின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.