fbpx

நிராகரித்த அஜித்..!! செட்டாகாத நயன்..!! கமலுடன் கைகோர்த்த விக்கி..!! வெளியான சுவாரஸ்ய தகவல்..!!

ஏகே 62-வில் இருந்து விக்னேஷ் சிவன் கழற்றிவிடப்பட்ட அவரது அடுத்தக்கட்ட பிளான் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

துணிவு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே தனது 62-வது படத்தில் நடிக்க கமிட்டானார் அஜித். இதுதொடர்பான அறிவிப்பில், ஏகே 62 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கும் என்றும், விக்னேஷ் சிவன் இயக்குவார் என்றும் அனிருத் இசையமைப்பார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. விக்னேஷ் சிவன் சொன்ன ஒன்லைன் ஆரம்பத்தில் பிடித்துப்போக அடுத்ததாக அவர் சொன்ன முழு கதையும் திருப்தி அளிக்காததால் ஏகே 62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் கழற்றிவிடப்பட்டார். இதனையடுத்து ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்கவிருக்கிறார். ஆனால், அதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இதற்கிடையே விக்னேஷ் சிவன் கழற்றிவிடப்பட்டதால் இது தனக்கு நேர்ந்த மிகப்பெரிய அவமானமாக விக்கி நினைக்கிறார் என பேச்சு எழுந்துள்ளது.

இதையடுத்து, விக்னேஷ் சிவன் ஒரு படம் இயக்கி அதனை ஹிட்டாக்கி தன்னை கோலிவுட்டுக்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதனால் சிறந்த கதையை தயார் செய்யும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார். அதேசமயம் அந்தப் படத்தை யாரை வைத்து இயக்குவது என்ற குழப்பத்தில் இருந்ததாகவும், முதலில் விஜய் சேதுபதியிடம் சென்று தனது அடுத்த கதையில் நடிப்பதற்கு கால்ஷீட் கேட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் விஜய் சேதுபதி நடிப்பதற்கு தயக்கம் காட்டியதாகவும் சொல்லப்பட்டது. இதையடுத்து, நயன்தாராவை வைத்து படம் இயக்க அவர் திட்டமிட்டு கதாநாயகியை மையப்படுத்தி கதையை தயார் செய்ய ஆரம்பித்திருக்கிறார் என பேச்சு எழுந்தது. ஆனால், பெரிய ஹீரோ படத்திலிருந்து கழற்றிவிடப்பட்டதால் இன்னொரு ஹீரோவை வைத்து ஹிட் கொடுத்தால்தான் இண்டஸ்ட்ரியில் மதிப்பு இருக்கும் என நினைத்ததால் அந்தத் திட்டத்தை பாதியிலேயே கைவிட்டுவிட்டார்.

இப்படிப்பட்ட சூழலில், லவ் டுடே படத்தில் நடித்து பிரபலம் ஆன பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சிவகார்த்திகேயனுக்காக எழுதப்பட்ட கதை எனவும், அந்தப் படத்தின் பணிகள் சில காரணங்களால் ஆரம்பிக்கப்படவில்லை என தெரிகிறது. மேலும், இந்தப் படம் டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டாக இருக்கலாம் என சொல்லும் திரையுலகினர், மற்றொரு ஹீரோவை தேடும் படலத்தில் விக்கி இருப்பதாக கூறுகின்றனர். இந்நிலையில் பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்கும் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட 45 கோடி ரூபாய் வரை வரும் எனவும், தயாரிப்பில் மீண்டும் மும்முரமாக இறங்கியிருக்கும் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் இந்தப் படத்தை தயாரித்தால் நிச்சயம் விக்னேஷ் சிவனுக்கு நல்லதுதான் எனவும் பேசப்படுகிறது.

Chella

Next Post

இசை கலைஞர் கே.சந்திரசேகர் திடீர் மரணம்..!! கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்த இளையராஜா..!!

Thu Mar 9 , 2023
இளையராஜா இசையில் ஆயிரக்கணக்கான பாடல்கள் வெளியாகி இருந்தாலும், ஒரு சில பாடல்கள் எப்போதுமே ரசிகர்களுக்கு பிடித்த பாடல்களாக உள்ளன. அந்த வகையில், இளையராஜா இசையமைத்த பாடல்களான இளையநிலா, பாடும் வானம் பாடி போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு இளையராஜாவுடன் இணைந்து, தன்னுடைய கிட்டார் இசையின் மூலம் பாடல்களை மெருகேற்றியவர் கே.சந்திரசேகர். இவர், கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், தன்னுடைய 79 வயதில் நேற்று உயிரிழந்தார். […]
இசை கலைஞர் கே.சந்திரசேகரன் திடீர் மரணம்..!! கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்த இளையராஜா..!!

You May Like