சின்னத்திரை நடிகை ரித்திகா, சீரியலில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவி பிரபலம் ரித்திகா, ‘பாக்கியலட்சுமி’ தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடரில் ரித்திகாவின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பாராட்டுக்கள் கிடைத்துள்ளது. இந்நிலையில், ரித்திகாவுக்கு கடந்த நவம்பர் மாதம் திருமணம் நடந்து முடிந்த நிலையில், தற்போது ரித்திகாவும் அவரது கணவரும் ஜாலியாக மாலத்தீவுக்கு சென்று ஹனிமூனை என்ஞ்சய் செய்து வருகின்றனர். இதுதொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில், பாக்கியலட்சுமி சீரியலை விட்டு ரித்திகா விலகப்போவதாக சின்னத்திரை வட்டாரங்களில் செய்திகள் பரவி வருகிறது. இதுகுறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் சீரியல் குழுவினரோ, ரித்திகாவோ வெளியிடவில்லை. இருப்பினும் சமீபகாலங்களில் ரித்திகாவின் போர்ஷன் சீரியலில் குறைக்கப்பட்டுள்ளது. எனவே, அவர் சீரியலில் தொடர்வாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.