தமிழ் சினிமாவில் ஒரு சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். ஒரு சாதாரண பஸ் கண்டக்டராக இருந்து சினிமா மீது உள்ள ஆசையால் சென்னை பிலிம் இன்ஸ்டியூட்டில் சேர்ந்து பாலச்சந்தரால் அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் முதன் முதலில் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானார். இவர் நடிக்க ஆரம்பித்த படங்களில் துணை நடிகராகவும் வில்லனாகவுமே தோன்றி இருப்பார். இவர் சினிமாவிற்குள் வரும் சமயத்தில் கமல் மிகவும் பீக்கில் இருந்த நடிகராகவே மாறி இருந்தார். பைரவி என்ற படத்தின் மூலம் தான் கலைஞானம் இவரை முதன்முதலாக ஹீரோவாக மாற்றினார்.
அதனால் ரஜினியின் வாழ்க்கையில் பாலச்சந்தரும் கலைஞானமும் மிகவும் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்தனர். இவரின் தொடர் வெற்றி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் இவர் பின்னால் வரச் செய்தது. தமிழகத்தையே ஆளும் அளவிற்கு இவரின் வளர்ச்சி ஒரு அபார வளர்ச்சியாக மாறியது. அதனால்தான் அரசியலிலும் ரஜினியை எட்டிப் பார்க்க வைத்தது. அரசியலுக்கு வந்து விடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தனர். ஏன் ஒரு நாள் அந்த அரசியலே இவரைத் தேடிப் போய் நின்றது. இதைப் பற்றி பிரபல பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் முன்னதாக ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
அதாவது 1996இல் ரஜினி நினைத்திருந்தால் அவர் காலுக்கு கீழேதான் மகுடம் இருந்தது. ஆனால் அதை அவர் எட்டி உதைக்கவும் இல்லை. ஏற்றுக்கொள்ளவும் இல்லை என்று கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் இந்த சம்பவத்திற்கு பிறகு தான் அருணாச்சலம் படம் வெளிவந்தது. அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கூட 30,000 கோடி ரூபாய் தொகையை அப்படியே விசுவிடம் ஒப்படைத்துவிட்டு தனக்கு எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு கிளம்புவார். அதுதான் ரஜினி. உண்மையில் அவர் அப்படித்தான் இருக்க ஆசைப்படுகிறார். மேலும், அமைதியை விரும்புவார். 1996 இல் ரஜினிக்கு இருந்த செல்வாக்கை யாராலும் மறைக்கவும் முடியாது. அழிக்கவும் முடியாது என்றும் நக்கீரன் கோபால் கூறியிருக்கிறார்.