நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நாக சைதன்யா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக அவரை விவாகரத்து செய்தார். அதற்கு காரணமே பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்த நடிகை சோபிதா துலிபாலாவுடன் நாக சைதன்யா காதல் கொண்டது என கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது நடிகை சோபிதா துலிபாலாவையும் அவர் பிரேக்கப் செய்து விட்டதாக தகவல்கள் பரவி வருகின்றனர்.
தமிழில் ரட்சகன் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் நாகார்ஜுனா மகன் தான் நாக சைதன்யா. தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நாக சைதன்யா தனது முதல் படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடித்தார். இருவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில், கடந்த 2017இல் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்து 4 ஆண்டுகள் ஓடிய நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் 2021இல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இருவருக்கும் குழந்தைகள் ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக வானதி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சோபிதா துலிபாலாவும் நாக சைதன்யாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாகவும் அதன் காரணமாகத்தான் சமந்தாவை நாக சைதன்யா பிரிந்தார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டன. மேலும், தனது தந்தையை போலவே நாக சைதன்யாவும் இரண்டாவது திருமணம் செய்ய போகிறார் என பேச்சுக்கள் அடிபட்டன.
இந்நிலையில், அடுத்த அதிர்ச்சி தகவல்கள் தற்போது டோலிவுட்டையே பரபரப்பில் ஆழ்த்தி உள்ளது. நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சோபிதா துலிபாலாவும் காதலித்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இருவரும் பிரேக்கப் செய்து விட்டு பிரிந்து விட்டதாகவும், சமீப காலமாக இருவரையும் ஒன்றாக பார்க்க முடியவில்லை என்றும் இருவரும் பேசிக் கொள்வது கூட இல்லை என தெலுங்கு திரையுலக வட்டாரத்தில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இதுவரை இதுதொடர்பாக இருவரும் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.