சமந்தாவும் நாக சைதன்யாவும் கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி ஒரு கூட்டறிக்கை மூலம் தங்கள் பிரிவை அறிவித்தனர். அவர்கள் தங்கள் விவாகரத்து குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து, அதைப் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.. கடந்த சில வாரங்களாக, நாக சைதன்யா, சமந்தா அளித்து வரும் நேர்காணல்களில் தங்களின் பிரிவைப் பற்றி பேசி வருகின்றனர்.
அந்த வகையில், காஃபி வித் கரண் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா, நாக சைதன்யாவுடன் பிரிந்த பிறகு ஒரே அறையில் தன்னை வைத்திருந்தால், கூர்மையான பொருட்களை மறைத்து வைக்க வேண்டும் என்று தெரிவித்தார். அவர் மீது தனக்கு கடினமான உணர்வுகள் இருப்பதாகவும் சமந்தா தெரிவித்தார்..
ஆனால் அதே நேரத்தில், நாக சைதன்யாவிடம் சமந்தாவை இப்போது சந்தித்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்கப்பட்டது. “நான் ஹாய் சொல்லி அவரை கட்டிப்பிடிப்பேன்..” என்று கூறினார்.
இந்நிலையில் 2-வது திருமணம் செய்து கொள்ள சமந்தா சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. சமீபத்தில் சமந்தா கொடுத்த பேட்டி ஒன்றில், தனக்கு மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் என்ண்ணம் இல்லை என்றே கூறியிருந்தார்.. ஆனால், சத்குரு ஜக்கி வாசுதேவ் சமாதானப்படுத்தியதை அடுத்து, சமந்தா இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொள்ள சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே நாக சைதன்யா நடிகை ஒருவருடன் டேட்டிங் செய்வதாகவும், விரைவில் 2-வது திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியானது.. மேலும் நாக சைதன்யாவும் சமந்தாவும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. அதற்கான சட்ட நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.