தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. இவர் தற்போது சிட்டாடல் எனும் வெப் தொடரில் நடித்து வருகிறார். சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன் மயோசிடிஸ் எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வந்தார். இந்த நோயால் அவர் பல கஷ்டங்களையும் அனுபவித்தார். சிகிச்சையினால் நோயில் இருந்து மீண்டு வந்த சமந்தா, படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
இந்நிலையில், ரசிகர்களுக்கு மீண்டும் ஷாக் கொடுக்கும் விதமாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகை சமந்தாவிற்கு USA-வில் அறுவை சிகிச்சை நடக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தொடர்ந்து 6 மாதம் எந்த ஒரு படப்பிடிப்பிலும் சமந்தா கலந்துகொள்ள போவதில்லை என்று தகவல் தெரிவிக்கின்றனர். விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.