விஜய் டிவியில் நடத்தப்படும் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமானது சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியின் 9-ஆவது சீசன் நேற்றைய தினம் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பங்கேற்றார். இந்தப் போட்டி நிகழ்ச்சியில் முதலாம் இடத்தை அருணா பெற்றுக் கொண்டார். அவருக்கு ரூ.60 லட்சம் மதிப்பிலான வீடு மற்றும் ரூ.10 லட்சம் பணமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

இந்நிலையில், பொதுவாகவே சூப்பர் சிங்கர் ரிசல்ட் விமர்சனத்திற்கு உள்ளாகி வருவது வாடிக்கையான ஒரு விஷயம் தான். அந்த வகையில், தற்போது 9-ஆவது சீசன் முடிவும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அதாவது இந்த சீசனில் அருணா பட்டத்தை வென்றதற்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வரும் அதே வேளையில், இந்த சீசனில் அப்ஜித் தான் சிறப்பாக பாடினார் என்றும், அவருக்குத்தான் இந்த சீசனில் பட்டம் கொடுத்திருக்க வேண்டும் என்றும் பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.