fbpx

செம ஷாக்..!! நடிகர் ரோபா ஷங்கரா இது..? அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியதால் ரசிகர்கள் அதிர்ச்சி..!!

நடிகர் ரோபோ ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று, அங்கு ஜொலித்துக் கொண்டிருப்பவர்களில் நடிகர் ரோபோ ஷங்கரும் ஒருவர். மேடை நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பார்வையாளர்களை மகிழ்வித்துக் கொண்டிருந்த இவருக்கு, சின்னத்திரையில் நுழையும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து, அவர் வெள்ளித்திரைக்கு சென்றார். அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என்று பல நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்துள்ளார்.

செம ஷாக்..!! நடிகர் ரோபா ஷங்கரா இது..? அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியதால் ரசிகர்கள் அதிர்ச்சி..!!

2002ஆம் ஆண்டு பிரியங்கா என்ற டான்ஸரை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட ரோபோ ஷங்கருக்கு இரு மகள்கள் இருக்கின்றனர். அதில் இந்திரஜா என்பவர், அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்திருந்தார். ரோபோ ஷங்கரின் டான்ஸ் வீடியோக்களை அவரது மனைவியும், மகளும் இன்ஸ்டகிராமில் பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில், ரோபோ ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து பார்வையாளர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். கட்டுமஸ்தான உடல் தோற்றத்தில் இருந்த ரோபோ ஷங்கர், தற்போது உடல் மெலிந்து அடையாளம் தெரியாத அளவுக்கு மிகவும் ஒல்லியாக மாறியுள்ளார். உடல் எடையை திட்டமிட்டு குறைத்தாரா? அல்லது ஏதேனும் படத்துக்காக இந்த கெட்டப் மாற்றமா? என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Chella

Next Post

பிக்பாஸ் அபிராமிக்கு திருமணம் ஆகிருச்சா..? இன்ஸ்டாவில் அவரே வெளியிட்ட ஆதாரம்..!!

Fri Mar 17 , 2023
பிக்பாஸ் அபிராமி, கழுத்தில் மஞ்சள் கயிறுடன் ஸ்டோரியில் வெளியிட்ட புகைப்படம், அவருக்கு திருமணமாகிவிட்டதோ என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் தனக்கான ஓரிடத்தைப் பிடித்தவர் அபிராமி வெங்கடாச்சலம். மாடல், பரதநாட்டிய கலைஞர், சின்னத்திரை நிகழ்ச்சி நடுவர் என பன்முகத்திறமைக் கொண்ட இவர், நடிகர் அஜித்தின் நேர்க்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார். பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கியதற்காக கெளரவ ‘டாக்டர்’ பட்டமும் பெற்றுள்ளார் […]

You May Like