விஜய் தொலைக்காட்சியை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் மட்டுமல்ல, தொலைக்காட்சி ரசிகர்கள் யாராக இருந்தாலும் அவர்களால் இவரை எப்போதும் மறக்கவே முடியாது.இவர் முதன்முதலில் தொலைக்காட்சிக்குள் நுழைந்தது மக்கள் தொலைக்காட்சியின் மூலமாகத்தான். பின்பு அங்கிருந்து இவர் வேலை பார்க்காத தொலைக்காட்சியே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
பல முன்னணி தொலைக்காட்சிகளில் பிரபலமாக திகழ்ந்து வந்த நடிகை விஜே சித்ரா கடைசியாக விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா தொடரில் நடித்து இல்லத்தரசிகளின் மத்தியில் மட்டுமல்லாமல் இளம் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய பிரபலமாக திகழ்ந்து, அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர்.
இந்த தொடரில் அவர் நடித்துக் கொண்டிருந்த போதே ஹேமந்த் என்பவரோடு திருமணம் என்ற செய்தி ரசிகர்களிடையே பரவ, அனைவரும் நடிகை சித்ராவுக்கு தங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை பொழிந்தனர்.
இந்த நிலையில், திடீரென்று கடந்த 2020 ஆம் வருடம் அவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் உயிரிழந்து 2 வருடங்கள் ஓடிவிட்டது. தற்சமயம் அவர் தொடர்பாக நடிகை சரண்யா சில விவகாரங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் சரண்யா தெரிவித்ததாவது, சித்ரா என்னிடம் நான் காதலிக்க ஆரம்பித்த பிறகு தான் மெகா தொடரில் ரொமான்ஸ், முதலிரவு காட்சிகள் உள்ளிட்டவைகள் வருகின்றன. என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை என்று கூறினார்.
என்னுடைய வருங்கால கணவர்தான் புரிந்து கொள்ள வேண்டும், ஆனால் பிரச்சனைகள் வருகிறது. இல்லை என்றால் இனி தொடரில் அப்படி நடிக்க முடியாது என்று தெரிவிக்க வேண்டும் என கூறினார். என தெரிவித்திருக்கிறார் சரண்யா. அத்துடன் ஹேமந்த் மற்றும் சித்ரா உள்ளிட்டோர் பேசிய ஆடியோவையும் தன்னிடம் காட்டி சித்ரா அழுததாக சரண்யா விவரித்திருக்கிறார்.