fbpx

கழண்டு விழும் ஆடையுடன் படுக்கையறையில் கவர்ச்சி போஸ்..!! வைரலாகும் அனிகாவின் அந்த போட்டோஸ்..!!

நடிகை அனிகா சுரேந்திரன் மாலத்தீவில் தனது விடுமுறையை கொண்டாடி வரும் நிலையில், அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் இளநீர் போட்டோக்களுக்கு ஏடாகூடமான கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. மலையாள பைங்கிளியான அனிகா சுரேந்திரன், குழந்தை நட்சத்திரமாக தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து, தற்போது ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ளார். குறிப்பாக, தமிழில் நடிகர் அஜித் மற்றும் நயன்தாராவுடன் நடித்த படங்கள் தான் இவரை அதிகம் கவனிக்க வைத்தது. அதிலும் நயன்தாரா சாயலில் இவர் இருப்பதாகக் சிலர் கூறியது இவருக்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்டாக அமைந்தது.

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக அனிகா நடித்திருந்தார். இதை தொடர்ந்து இவரின் யோகம் ‘விஸ்வாசம்’ படத்திலும் அஜித் மற்றும் நயன்தாராவுக்கு மகளாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதே போல் நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாராவின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்த அனிகா, பாஸ்கர் தி ராஸ்கல் படத்தில் நயனுக்கு மகளாக நடித்தார். மேலும், தமிழில் விஜய் சேதுபதிக்கு மகளாக மாமனிதன், குயின் வெப் சீரிஸில் ஜெயலலிதாவின் சிறிய வயது கதாபாத்திரம் என கலக்கினார்.

தற்போது அனிகாவுக்கு 18 வயது ஆகிவிட்டதால், ஹீரோயின் சப்ஜெட் படங்களில் மட்டுமே தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில், தெலுங்கில் வெளியான புட்ட பொம்மா படத்தின் மூலம் ஹீரோயினாக மாறினார். இதை தொடர்ந்து மலையாளத்தில் ஓ மை டார்லிங் படத்தில் லிப் லாக் காட்சி வரை நடித்து இளம் நடிகைகளையே ஓரம் கட்டினார். தற்போது இவரின் கைவசம் ‘வ்ஃபுலி யுவர்ஸ் வேதா’ என்கிற மலையாள படமும், தமிழில் ஆதியுடன் PT சார் படத்திலும் நடித்துள்ளார். 

அடுத்தடுத்து ஹீரோயின் வாய்ப்புகள் குவிந்து வருவதால், படிப்பை விட திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தும் அனிகா, தற்போது மாலத்தீவுக்கு சில ஆண் நண்பர்கள் மற்றும் பெண் தோழிகளுடன் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு சென்றதில் இருந்து தூக்கலான கவர்ச்சியில் அலப்பறை செய்யும் இவர், பெட் ரூமில் இருந்தபடி ஆடை அவிழுந்து விழுவதை கூட கண்டுகொள்ளாமல் கிளாமர் போஸ் கொடுத்துள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Chella

Next Post

வாட்ஸ் அப்பில் தெரியாத எண்ணிலிருந்து அழைப்புகள் வருகிறதா..? இனி கவலையே வேண்டாம்..!! புதிய அப்டேட்..!!

Thu Jun 22 , 2023
உலகின் மிகப்பெரிய சமூக ஊடகமான வாட்ஸ் அப்பில் (WhatsApp) தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இந்நிலையில், மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பயனர்கள் பிளாட்ஃபார்மில் அத்தகைய அழைப்புகளை தானாகவே முடக்க அனுமதிக்கிறது. இன்ஸ்டாகிராமில் உள்ள மெட்டா சேனலின் கூற்றுப்படி, இந்த புதிய அம்சம் வாட்ஸ்அப்பை மேலும் தனிப்பட்டதாக்கும் மற்றும் பயனர்களுக்கு […]

You May Like