கோடிக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட ஒரு ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் தான். இந்த நிகழ்ச்சியானது தமிழ், ஹிந்தி, தெலுங்கு எனப் பல மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் தெலுங்கு சீசன் 7 சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில், இந்நிகழ்ச்சியை நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த சீசனில் தெலுங்கு நடிகர் சிவாஜி, ஷகீலா, நடிகை கிரண், பிரியங்கா ஜெயின், பாடகி தாமினி பட்லா, யூடியூபர் டேஸ்டி தேஜா, டான்ஸர் ஆட்டா சந்தீப், இசையமைப்பாளர் போலே ஷவாலி, இளம் விவசாயியாக அறியப்படும் பல்லவி பிரஷாந்த், டாக்டர் கௌதம் கிருஷ்ணா, சுபஸ்ரீ, சின்னத்திரை நடிகர் பிரின்ஸ் யாவர், அமர்தீப், அர்ஜுன் அம்பதி, ஷோபனா ஷெட்டி ஆகியோர் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளனர்.
இவர்களில் நடிகை கிரண் முதல் வாரத்திலேயே குறைவான வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இந்த நிகழ்ச்சி தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரை நன்றாக சென்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷகிலாவின் புகைப்படம் ஒன்று வெளியாகி சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, நிகழ்ச்சியில் ஷகிலா புகைப்பிடித்து இருக்கிறார்.
பொதுவாகவே பிக்பாஸ் வீட்டிற்குள் புகை பிடிப்பதற்கு என்று ஒரு தனி அறை இருக்கும். பெரும்பாலும் அந்த அறையில் பிரபலங்கள் புகை பிடிக்கும் காட்சிகள் டிவியில் ஒளிபரப்பா மாட்டார்கள். இருந்தாலும் எப்படியோ சில புகைப்படங்கள் கசிந்து விடுகிறது. அந்த வகையில், தற்போது தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷகிலா புகைப்பிடிக்கும் காட்சி வைரலாகி வருகிறது. இதற்கு பலருமே ஏன் இப்படி? உங்களை நாங்கள் ஒரு நல்ல இடத்தில் வைத்து மதிக்கிறோம் என்றெல்லாம் கூறுகிறார்கள்.
கவர்ச்சி நடிகையாக இருந்த இவரை தற்போது அம்மா என்று சொல்லும் அளவிற்கு மாற்றியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இதன் மூலம் ஷகிலா, ரசிகர்கள் மனதில் மீண்டும் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். ஆனால், தற்போது வெளியாகி இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.