தமிழ் சினிமாவில் 80-களில் தவிர்க்க முடியாத கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் தான் சில்க் ஸ்மிதா. தன்னுடைய குழந்தைத்தனமான பேச்சு, அழகிய கண்கள், வித்தியாசமான ஆடைகள் அணிவது என அனைவரையும் வெகுவாக கவர்ந்தார். இவரைப் பற்றி பல கிசுகிசுக்கள் வந்தாலும் சொந்த வாழ்க்கையில் தெரியாமல் எத்தனையோ பேருக்கு உதவியும் செய்திருக்கிறார். இவருடைய கவர்ச்சி நடனத்தை பார்ப்பதற்காகவே ஏராளமான ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வருவதும் உண்டு.
அவருடைய மரணம் தான் இதுவரை ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது. அதுவும் அவருடன் நடித்த சக நடிகர்கள், நடிகைகள் இன்று வரை அவரை பற்றி பேசும் போது முதல் நாள் இரவு கல்யாணத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தாள். மறுநாள் செய்தித்தாள்களில் அவள் இறந்ததை பற்றிய செய்தியை தான் பார்க்க முடிந்தது என கூறியிருக்கிறார்கள்.
இந்நிலையில், பிரபல மலையாள நடிகையான ஷகீலா, சில்க் ஸ்மிதாவை பற்றி ஒரு அனுபவத்தை பேட்டியின் மூலம் கூறியிருக்கிறார். ஷகீலா 15 வயதாக இருக்கும் போது அவர் நடித்த முதல் படத்தில் சில்க்கிற்கு தங்கையாக நடித்தாராம். முதல் நாள் படப்பிடிப்பிற்கு சில்க் வரவில்லையாம். இரண்டாம் நாள் படப்பிடிப்பிற்கு தான் சில்க் வந்தாராம். அப்போது சில்க் மிகவும் அந்தஸ்தை பெற்ற நடிகையாக தான் இருந்தாராம். ஷகீலாவிற்கு ஒரு ஸ்விம்மிங் ஃபுல் உடை மாதிரியான டிரெஸ்ஸை கொடுத்திருந்தார்களாம். அதை அணிந்து கொள்ள பாத்ரூம் போவதற்காக இடத்தை தேடி இருக்கிறார். பாத்ரூம் போக வேண்டும் என்றால் முழு ஆடையையும் கழட்டி விட்டு தான் போக வேண்டுமாம். அதனால் ஒரு பாதுகாப்பான இடத்தை நோக்கி தேடி இருக்கிறார் ஷகீலா.
அவர் தங்கியிருந்த அறைக்கு மேல் தான் சில்க் அறை இருந்ததாம். அது மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என நினைத்து ஷகீலாவும் சில்க் ரூமுக்கு சென்றாராம். ஆனால், இங்கு எல்லாம் வரக்கூடாது என சில்க்கும் அவருடைய உதவியாளர்களும் அவரை வெளியே துரத்தி விட்டார்களாம். இந்த ஒரு சம்பவத்தால் ஷகீலா “தயவு செய்து சில்க் மாதிரி மட்டும் வரவே கூடாது” என யோசித்தாராம். அவர் தன்னிடம் காட்டிய ஆட்டிடியூடை வேறு யாரிடமும் நாம் காட்டவே கூடாது என்று உறுதியாக இருந்தாராம். அதிலிருந்து இன்று வரை ஷகீலா அவருடைய உதவியாளர்கள் யாராக இருந்தாலும் தனக்கு சமமாக தான் வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.