fbpx

ஷிவினுக்கு தகுதியே இல்லை..!! கொளுத்திப் போட்ட பிக்பாஸ்..!! கொந்தளிக்கும் போட்டியாளர்கள்..!! விறுவிறு டாஸ்க்..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால், இந்த சீசன் தொடக்கத்தில் இருந்து சண்டையும், சச்சரவுமாக இருந்த பிக்பாஸ் வீடு இரண்டு வாரங்களாக மந்தமாக சென்று கொண்டிருக்கிறது. இதனால், பிக்பாஸ் ஒரு தீக்குச்சியை கொளுத்தி போட்டுள்ளது.

ஷிவினுக்கு தகுதியே இல்லை..!! கொளுத்திப் போட்ட பிக்பாஸ்..!! கொந்தளிக்கும் போட்டியாளர்கள்..!! விறுவிறு டாஸ்க்..!!

அதாவது அனைத்து சீசன்களிலுமே ரேங்கிங் டாஸ்க்கில் கண்டிப்பாக சண்டை வரும். அப்படி இருக்கையில் இந்த சீசனில் சொல்லவா வேண்டும். ரேங்கிங் டாஸ்க் என்றதும் போட்டியாளர்கள் அனைவரும் தனக்கு இந்த இடம்தான் வேண்டும் என அடித்துக் கொள்கிறார்கள். டாஸ்க் ஆரம்பித்ததும் ஓடிவந்து முதல் இடத்தில் நிற்கிறார் அசீம். ஆகையால், இவருக்கும் விக்ரமனுக்கும் இடையே சண்டை வருகிறது. அந்த சமயத்தில் அமுதவாணன் மற்றும் அசீமுக்கு இடையே ஆன சண்டையை விக்ரமன் கூறுகிறார். இதனால், ஆத்திரமடைந்த அசீம் கத்துகிறார். இது ஒரு புறம் இருக்க ஏடிகே மற்றும் ஷிவின் இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது.

ஷிவினுக்கு தகுதியே இல்லை..!! கொளுத்திப் போட்ட பிக்பாஸ்..!! கொந்தளிக்கும் போட்டியாளர்கள்..!! விறுவிறு டாஸ்க்..!!

இதில், ஆவேசத்தில் ஏடிகே முதல் ஒன்பது இடமும் ஷிவினுக்கு தகுதி இல்லை என்று சொல்லி பத்தாவது இடத்தில் நிற்குமாறு கூறுகிறார். இதனால், ஷிவின் கோபமாகி கத்துகிறார். இவ்வாறு ஒவ்வொரு போட்டியாளர்கள் இடமும் இந்த டாஸ்கினால் சண்டை பூதாகரமாக வெடிக்க தொடங்கியுள்ளது. கடைசியில் இந்த ரேங்கிங் டாஸ்க்கை இவர்களுக்குள் முடிப்பதற்குள் கைகலப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி அடிக்கடி அசீம் மற்றும் விக்ரமன் இடையே தான் சண்டை வெடிக்கிறது. அதுவே அசீமுக்கு ஒரு பிரச்சனை என்றாலும் முதலில் குரல் கொடுக்க விக்ரமன் தான் வருகிறார். மேலும், இன்றைய எபிசோடு மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று இந்த ப்ரோமோ மூலம் தெரிகிறது.

ஷிவினுக்கு தகுதியே இல்லை..!! கொளுத்திப் போட்ட பிக்பாஸ்..!! கொந்தளிக்கும் போட்டியாளர்கள்..!! விறுவிறு டாஸ்க்..!!

இதில், ஏடிகே மற்றும் மணிகண்டன் இருவரும் நாமினேஷன் ஃப்ரீ ஆகியுள்ளதால் இந்த வாரம் தனலட்சுமி பிக்பாஸ் வீட்டை விட்டு போக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆகையால் தனலட்சுமி முதல் ஐந்து இடங்களில் வருவதற்காக சண்டையிடவும் வாய்ப்பு உள்ளது.

Chella

Next Post

வீட்டில் விபச்சார தொழில்.. ரகசிய அறையில் காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்..!

Fri Dec 23 , 2022
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள லாமிங்டன் சாலையில் உள்ள வீட்டில் விபச்சார தொழில் நடைபெற்று வருகிறது. 20க்கும் மேற்பட்ட பெண்கள் விபச்சார தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இந்த சட்டவிரோத செயலில் ஈடுபடுவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த பெண்கள் அழைத்து வரப்படுவதாக சமூக குற்றப்பிரிவிலிருந்து காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் பேரில், உண்மையைக் கண்டறிய ஒருவரை வாடிக்கையாளர்கள் போல அனுப்பி விபச்சாரம் […]

You May Like