சமீப காலமாக திரையுலகில் நடிகைகள் பலரும் ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகை சமந்தா தோல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் தான் மீண்டுள்ளார். அவரை அடுத்து நடிகை மம்தா மோகன்தாஸ், தான் ‘விட்டிலிகோ’ என்ற ஆட்டோ இம்யூன் நோயால் பாதித்துள்ளதாக இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இப்படி பல நடிகைகள் தாங்கள் சில நோய் தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல இந்தி சீரியல் நடிகை சிவாங்கி ஜோஷி, தான் சிறுநீரக பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
2013இல் வெளியான ஜீ டிவியில் ஒளிபரப்பான ‘கெல்தி ஹை ஜிந்தகி ஆன்க் மிச்சோலி’ தொலைக்காட்சி தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை சிவாங்கி ஜோஷி. அதனைத் தொடர்ந்து பெயின்டேஹா, லவ் பை சான்ஸ், பெகுசராய் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். 2020இல் கேன்ஸ் திரைப்பட விழாவில் எவர் ஓன் ஸ்கை திரைப்படத்துடன் அறிமுகமாக இருந்தார் நடிகை சிவாங்கி. ஆனால், கொரோனா காரணமாக, படம் பின்னர் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகை சிவாங்கி ஜோஷி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘அனைவருக்கும் வணக்கம். கடந்த 2 நாட்களுக்கு முன் எனக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டது. தற்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். கடந்த 2 நாட்களாக கடினமான சூழலில் இருந்து மீண்டு வருகிறேன்” என பதிவிட்டுள்ளார். அவருக்கு சக நடிகர்கள், நடிகைகள், ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.