fbpx

அதிர்ச்சி..!! ‘வாரிசு’ படத்தின் புரொடக்‌ஷன் டிசைனர் மரணம்..!! சோகத்தில் படக்குழுவினர்..!!

வாரிசு படத்தின் புரொடக்‌ஷன் டிசைனர் சுனில் பாபு மாரடைப்பால் காலமானார்.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ’வாரிசு’. தில் ராஜு தயாரித்துள்ள இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படமாக உருவாகியிருக்கிறது. வித்தியாசமான கேரக்டரில் விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றார் தமன். கடந்த டிசம்பர் 24ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். இதையடுத்து கடந்த புதன் கிழமை வாரிசு படத்தின் ட்ரைலர் வெளியானது. இத்திரைப்படம் வரும் 11ஆம் தேதி வெளியாகிறது.

அதிர்ச்சி..!! ‘வாரிசு’ படத்தின் புரொடக்‌ஷன் டிசைனர் மரணம்..!! சோகத்தில் படக்குழுவினர்..!!

இந்நிலையில், வாரிசு படத்தின் புரொடக்‌ஷன் டிசைனர் சுனில் பாபு கொச்சியில் மாரடைப்பால் காலமானார். பிரபல புரொடக்‌ஷன் டிசைனர் சாபு சிரிலின் முன்னாள் இணை டிசைனரான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பெரிய படங்களில் பணிபுரிந்தார். துப்பாக்கி, உருமி, கஜினி உள்ளிட்ட படங்களில் சுனில் பாபு புரொடக்‌ஷன் டிசைனராக பணிபுரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

#சேலம்: 72 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 15 வயது சிறுவன்..!

Fri Jan 6 , 2023
சேலம் மாவட்ட பகுதியில் குடிபோதையில் 72 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்ட பகுதியில் உள்ள வீராணம் அருகே எம்.பாலப்பட்டியை சேர்ந்தவர் லட்சுமி( 72) . இவர், நேற்று மதியம், 2:45 மணியளவில் அதே பகுதியில், வயக்காட்டில் மாடுகளுக்கு புல் அறுத்துக் கொண்டிருந்தார். அப்போது பாரில் 2 பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அவர்கள் போதையில் மூதாட்டி லட்சுமியை […]

You May Like