விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீசன் 4இல் ஏற்கனவே நடந்த எலிமினேஷன் சுற்றுகளில் கிஷோர் ராஜ்குமார், காளையன் ஆகியோர் வெளியேறியுள்ளனர். இதை தொடர்ந்து இந்த வாரம் நடைபெற்ற எலிமினேஷன் சுற்றில் குறைந்த மதிப்பெண்களுடன் ஷெரின் மற்றும் ராஜ் அய்யப்பா இருவரும் இறுதிக்கட்டத்தில் இருந்தனர்.
இதில் ஷெரினை விட சற்று குறைவான மதிப்பெண்களை பெற்றதால், ராஜ் அய்யப்பா இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார். ராஜ் அய்யப்பா எலிமினேட் என நடுவர்கள் கூறியவுடன் புகழ், சுனிதா மற்றும் சில கண்கலங்கினர். அதே குக் வித் கோமாளி மூலம் தனக்கு கிடைத்த விஷயங்கள் குறித்தும் ராஜ் அய்யப்பா பகிர்ந்துகொண்டார். மீண்டும் வைல்ட் கார்ட் சுற்றில் அனைவரையும் சந்திக்கிறேன் என கூறிவிட்டு விடைபெற்று சென்றார்.