ஹாலிவுட் ஜாம்பவான் கிளாரன்ஸ் கிலியார்ட் ஜூனியர் காலமானார். அவருக்கு வயது 66.
இவரின் மரணத்தை லாஸ் வேகாஸில் உள்ள நெவாடா பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் நூல்களை கல்லூரியில் நாடகம் மற்றும் திரைப்பட பேராசிரியராக இருந்தவர். டை ஹார்ட், டாப் கன் போன்ற படங்களின் மூலம் சிறப்பு அங்கீகாரம் பெற்றவர். அதுமட்டுமின்றி வாக்கர், டெக்சாஸ் ரேஞ்சர் மற்றும் மேட்லாக் தொடர்களிலும் நடித்துள்ளார்.
கிளாரன்ஸ் கிலியார்ட் முன்பு கேத்தரின் டட்கோவை மணந்தார். பின்னர், அவரை விவாகரத்து செய்ததால் 2001ஆம் ஆண்டு வேறொரு பெண்ணை மறுமணம் செய்து கொண்டார். இந்நிலையில், இவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.