சற்றேற குறைய 6 வருடங்களாக பிரபல விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதுவரையில் நடைபெற்றுள்ள 6 சீசன்களிலும் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து வருபவர் நடிகர் கமலஹாசன்.
இந்த நிகழ்ச்சிக்கும், அவருக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதை போல் தான் தெரிகிறது. கமலஹாசன் இந்த நிகழ்ச்சியின் போது பேசும் இடம் அவர் நடந்து கொள்ளும் விதம் உள்ளிட்டவை அனைத்துமே ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும் விதத்திற்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.
இந்த நிலையில், பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் தற்போது 11 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டார்கள். ஆனால் 10 போட்டியாளர்கள் இன்னமும் இந்த வீட்டில் விளையாடி வருகிறார்கள். ஆனால் யார் இறுதி வரையில் இந்த போட்டியில் நிற்கப் போகிறார்? இந்த பிக்பாஸ் டைட்டிலை வெல்லப்பாவது யார்? என்று இதுவரையில் யாருக்கும் தெரியாது.
இந்த நிலையில் தான் பிக்பாஸ் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியூட்டும் செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, இனிவரும் காலங்களில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்கப்போவதில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த சீசனுடன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை நிறுத்தப் போகிறார் கமலஹாசன் என்று தகவல் கிடைத்திருக்கிறது. ஆனால் இது சமூக வலைதளங்களில் உலாவிவரும் தகவலாகும். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.