fbpx

மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய சிம்பு..!! அவர் தான் இனி எல்லாம்..!! சாமியாராக போனவருக்கு சம்சார ஆசை..!!

தந்தை டி. ராஜேந்தர் படங்களில் குழந்தை நட்சத்திரமாக கலக்கியவர் நடிகர் சிம்பு. இவர், உறவை காத்த கிளி என்ற படத்தில் குழந்தையாக நடித்தார். தொடர்ந்து மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி, சம்சார சங்கீதம், சாந்தி என்னது சாந்தி, பெற்றெடுத்த பிள்ளை, தாய் தங்கை பாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து லிட்டில் சூப்பர் ஸ்டார் என குழந்தையிலே டைட்டில் பெற்றவர் சிம்பு தான்.

அதன் பிறகு காதல் அழிவதில்லை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து அறிமுகம் ஆனார். பின்னர் தொடர்ந்து அலை, கோவில், குத்து, மன்மதன், தொட்டி ஜெயா, வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா, போடா போடி, வாலு, அச்சம் என்பது மடமையடா, செக்கச்சிவந்த வானம் என பல படங்களில் நடித்தார். இதற்கிடையே, சில படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்தது. அதன் பின்னர் மீண்டும் மாநாடு திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்தது. அந்த படத்தை தொடர்ந்து பத்து தல படத்தில் நடித்து மீண்டும் வெற்றி வாகை சூடினார்.

இந்நிலையில், சிம்பு சினிமாவில் கிடுகிடுவென வளர்ந்த வேகத்திலே சில காதல் கிசுகிசுக்களில் பேசப்பட்டார். குறிப்பாக ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா காதலித்து ஏமாற்றி தனுஷுக்கு கழுத்தை நீட்டியதை சிம்புவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லையாம். பின்னர் அதிலிருந்து மீண்டு வந்து நடிகை நயன்தாராவை காதலித்து அவருடன் தனிமையில் உல்லாசமாக இருந்த புகைப்படங்கள் கூட லீக்காகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி அவரது பெயரை கெடுத்தது. அதன் பின்னர் நடிகை ஹன்சிகாவால் காதலித்து ஏமாற்றப்பட்டார். பின்னர் காதலும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம். இனிமேல் கல்யாணமே பண்ணிக்கபோறதில்லை என சாமியாராக, காவி வேட்டி , கருப்பு வேட்டி என கட்டிக்கொண்டு சுற்றித்திரிந்தார்.

பின்னர் மீண்டும் ஆசைகள் துளிர்விட்டு தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே, மீண்டும் ஒரு இளம் நடிகை மீது காதலில் விழுந்துவிட்டாராம். ஆம், ஈஸ்வரன் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை நிதி அகர்வால் தானாம். சிம்பு கூடவே இருந்து அவருக்கு வேண்டியதெல்லாம் செய்து வருகிறாராம் நிதி அகர்வால். கிட்ட தட்ட சிம்புவின் மேனேஜர் போன்று இருந்து வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் பேசி வருகின்றன.

Chella

Next Post

BreakingNews:முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்….! முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை….!

Fri Jun 16 , 2023
முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் அரசின் முன்னறிவிப்பு திட்டங்களான முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் தொடர்பாக ஏற்கனவே 3 முறை ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை புதிய திட்டங்களின் தொடக்கம் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடைபெறுகிறது. மேலும் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் […]
மேயருக்கு மாதந்தோறும் ரூ.30,000..!! கவுன்சிலர்களுக்கு எவ்வளவு..? அதிரடி உத்தரவு பிறப்பித்த முதலமைச்சர்..!!

You May Like