fbpx

ரசிகர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் சிவகார்த்திகேயன்..!! அவரே சொன்ன குட் நியூஸ்..!!

நடிகர் சிவகார்த்திகேயன் டான், பிரின்ஸ் படங்களை தொடர்ந்து தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் அயலான், கமல்ஹாசன் தயாரிக்கும் படங்களும் கைவசம் உள்ளன. இந்நிலையில், சிவகார்த்திகேயன் அளித்துள்ள பேட்டியில், ”எனது நடிப்பை முழுமையாக வெளிப்படுத்தும் கதைகளுடன் புதிய இயக்குநர்கள் வருவதால் அவர்களின் படங்களில் நடிக்கிறேன். பெரிய டைரக்டர்களும் தற்போது என்னை அணுக தொடங்கி இருக்கிறார்கள்.

நான் இந்தி படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. ஆனால், அதில் உண்மை இல்லை. நமக்கான சம்பளத்தை வாங்கிக்கொண்டு தயாரிப்பாளரின் பிரச்சனையை கண்டு கொள்ளமால் ஒதுங்கி இருக்க முடியாது. நான் நடிக்கும் படங்களின் லாப நஷ்டங்களில் எனக்கும் பங்கு இருக்கிறது. அதை தீர்த்து வைப்பது எனது கடமை. நாடு முழுவதும் இருக்கும் எனது ரசிகர் மன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்து, அவர்களின் எதிர்காலம் வளமாகவும் நலமாகவும் அமைவதற்காக ஒரு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் திட்டம் உள்ளது.

மடோன் அஸ்வின் இயக்கிய மாவீரன் படத்தில் ஓவிய கலைஞராக நடித்து இருக்கிறேன். படத்தில் பேன்டசியான விஷயங்கள் நிறைய இருக்கிறது. ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் இருக்கும். சமூக அக்கறையான சில விஷயங்களும் உள்ளது. இது வழக்கமான படமாக இருக்காது. அதிதீ ஷங்கர், மிஷ்கின், சரிதா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்” என்றார்.

Chella

Next Post

இனி இதற்கெல்லாம் ஜிஎஸ்டி வரி கிடையாது..!! மத்திய அரசு சொன்ன செம குட் நியூஸ்..!!

Wed Jul 12 , 2023
டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 50-வது கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இந்த கூட்டம் நடந்து முடிந்தது. குறிப்பாக, ஆன்லைன் கேமிங், கேசினோ, குதிரைப் பந்தயம் போன்றவற்றில் பந்தயம் கட்டும் போது நடக்கும் மொத்தத் தொகைக்கும் 28 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.. ஆன்லைன் கேமிங், கேசினோ, குதிரை பந்தயம் சூதாட்டம் மற்றும் […]

You May Like