fbpx

”சில பேர் ஸ்டைல் பண்ணா ம** மாதிரி இருக்கும்”..!! நடிகர் பார்த்திபன் பரபரப்பு பேச்சு..!!

பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் நாளை திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. அப்படத்தின் புரமோஷனுக்காக கடந்த 10 நாட்களாக நாடு முழுவதும் சுற்றிவந்த படக்குழு, இன்று சென்னையில் நடைபெற்ற பிரஸ்மீட் மூலம் அதனை முடித்துள்ளது. இந்த பிரஸ்மீட்டில் படத்தில் நடித்த ஏராளமான நடிகர்கள் கலந்துகொண்டு பேசினர். குறிப்பாக பார்த்திபன் பேசிய பேச்சு தற்போது வைரலாகி வருகிறது. அவர் பேசுகையில், “மணிரத்னத்தின் அசிஸ்டண்ட் வந்து பொன்னியின் செல்வன் 1 படத்தின் புரமோஷனின் போது நீங்கள் பேசியது செம்ம வைரலா போச்சு. அந்த மாதிரி ஒரு பிட்ட இப்ப எடுத்து விடுங்கனு சொன்னாங்க. அவர் வைரலா வேணும்னு சொன்னதும் எனக்கு தோன்றியது ஐடி ரெய்டு தான். ஸ்கொயரா சொல்லல, ரவுண்டாவே சொல்றேன். நாளைல இருந்து ஒரு ஆயிரம் கோடி ரூபாய் எங்கையாவது ரெய்டு பண்ணனும்னு தோணுச்சுனா, பொன்னியின் செல்வன் 2 திரையிடப்படும் திரையரங்குகளுக்கு போங்க.

கண்டிப்பாக இந்த வாரத்தில் ரூ.1000 கோடி வசூலை அள்ளும் ஒரு படமாக பொன்னியின் செல்வன் இருக்கும். மணி சார் இந்த படத்துக்காக எவ்வளவு உழைப்பை கொட்டி இருக்கிறார் என்பதைவிட, இந்த படத்தின் புரமோஷனுக்காக நிறைய வார்த்தைகளை கொட்டியிருக்கிறார். அவர் இவ்வளவு பேசி யாருமே பார்த்திருக்க மாட்டாங்க. ஏன் சுஹாசினியே பார்த்திருக்க மாட்டாங்க. சில பேர் ஸ்டைல் பண்ணா மயிரு மாதிரி இருக்கும். ஆனா விக்ரம் மயிர வச்சிட்டே இவ்ளோ ஸ்டைல் பண்றாரு. வெறும் ஒரு குடுமிய வச்சிகிட்டு இப்படியெல்லாம் பண்றாரு. மயிருங்கிறது தூய தமிழ், இதை நாம தான் கெட்ட வார்த்தை என சொல்லிக்கொள்கிறோம். தங்களால் முடிஞ்ச ஒரு ஸ்டைல தங்கலான் மூலமா செஞ்சிருக்கீங்க உங்களுக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்தார்.

Chella

Next Post

லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட மோஷன் போஸ்டர்..!! சோஷியல் மீடியாவில் படு வைரல்..!! ரசிகர்கள் வாழ்த்து..!!

Thu Apr 27 , 2023
நகைச்சுவை நடிகர் சதீஷ் நடித்து வரும் ‘வித்தைக்காரன்’ படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டர் வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சதீஷ். இவர் கடந்த ஆண்டு ’நாய் சேகர்’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் ’வித்தைக்காரன்’ என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். கடந்த ஜனவரி 18ஆம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட்ட இத்திரைப்படத்தை […]

You May Like