fbpx

அடி மேல் அடி..!! வாய்ப்பு கேட்டு அழையும் விக்னேஷ் சிவன்..!! பயங்கர அப்செட்டில் நயன்..!!

இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு 2023ஆம் ஆண்டு மிக மோசமான ஆண்டாகவே அமைந்துள்ளது. அவர் இந்த ஆண்டு அஜித்தின் ஏகே 62 திரைப்படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால், அப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவனை அதிரடியாக நீக்கிவிட்டது லைகா நிறுவனம். அவர் சொன்ன கதை திருப்தி அளிக்காததால் அவரை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்து அப்படத்தின் பணிகள் நடந்து வருகிறது.

அடுத்ததாக லவ் டுடே இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு கிடைத்தது. தற்போது அவரை வைத்து எல்.ஐ.சி என்கிற படத்தை எடுக்க தயாராகி வருகிறார் விக்கி. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஏகே 62 வாய்ப்பு பறிபோன சோகத்தில் இருந்த விக்கி கமல் தயாரிப்பில் படம் கிடைத்ததால் செம்ம குஷியில் உள்ளாராம்.

இந்நிலையில், அவர் கைவசம் இருந்து மற்றுமொரு திரைப்படம் கைநழுவி சென்றுள்ள தகவல் வெளியாகி உள்ளது. விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாரா உடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதில், நடிகர் கவினை வைத்து ஊர்க்குருவி என்கிற திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. இப்படத்தை அருண் என்பவர் இயக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அந்த படத்தின் ஷூட்டிங்கே தொடங்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது அந்த படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்கவில்லை என்று தெரிகிறது. அவருக்கு பதில் ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் என்கிற நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் இப்படத்தின் ஹீரோவாக கவினுக்கு பதில் குக் வித் கோமாளில் பிரபலம் அஸ்வின் குமார் ஒப்பந்தமாகி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் ஷூட்டிங்கை வருகிற ஜூன் மாதம் தொடங்க உள்ளாராம் இயக்குனர் அருண்.

Chella

Next Post

மனைவியின் அந்தரங்க புகைப்படங்களை தோழிகளுக்கு அனுப்பி வைத்த கணவன்..!! என்ன காரணம் தெரியுமா..?

Tue Mar 28 , 2023
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் பெருமாள் (34). இவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இவருக்கு 9 வயதில் மகள் உள்ள நிலையில், மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், சதீஷ் பெருமாளுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், இருவரும் சுமூகமாக பேசி, விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது மகள், தாயுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், […]

You May Like