fbpx

மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா..!! பேனர் வைக்கக் கூடாது..!! நடிகர் விஜய் அதிரடி உத்தரவு..!!

நடிகர் விஜய் திரைப்படங்களில் நடிப்பதைத் தாண்டி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் குறிப்பாக தன்னுடைய 70-வது திரைப்படத்தை முடித்துக் கொண்டு நடிகர் விஜய், முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்று தெரிகிறது. இந்நிலையில், பல்வேறு அரசியல் நிகழ்வுகளை அவருடைய விஜய் மக்கள் இயக்கம் செய்து செய்து வருகிறது. அதில் முதல் கட்டமாக பல்வேறு தலைவர்களின் சிலைக்கு மரியாதை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெற்ற 1,500 மாணவர்களை நடிகர் விஜய், நேரில் சந்தித்து ஊக்கத்தொகை வழங்க உள்ளார். இந்த விழா வரும் சனிக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்குகிறது. நடிகர் விஜய் 9.30 மணிக்கு மண்டபத்திற்கு வருகிறார். மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர் காலை 7.45 மணிக்கு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு விருந்தளிக்கிறார் நடிகர் விஜய்.

இந்த விழாவுக்காக விஜய் ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தினர் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் விழாவிற்கு பேனர் மற்றும் கட் அவுட் வைக்கக் கூடாது என விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை அடுத்து நீலாங்கரை பகுதியில் விஜய் ரசிகர்கள் சுவர் விளம்பரம் செய்து வருகின்றனர்.

Chella

Next Post

இளம் பெண்ணை கொலை செய்துவிட்டு தப்பி சென்ற காதலனை…..! தீவிரமாக தேடும் காவல்துறையினர்…..!

Fri Jun 16 , 2023
லிவிங் டுகதர் வாழ்வில் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், இளம்பெண்ணை கொலை செய்த அவருடைய முன்னாள் காதலரை பிடிப்பதற்கு இயலாமல் பெங்களுரு காவல்துறையினர் திணறி வருகின்றனர். 23 வயதாகும் அகான்ஷா என்பவர் பெங்களூருவில் உள்ள ஒரு கல்வி மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் விற்பனை பிரிவு மேலாளராக பணிபுரிந்து வந்தார். இதே போன்ற ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய 27 வயதாகும் ஆர்பித் என்பவரை சென்ற வருடம் அகான்ஷா சந்தித்துள்ளார். முதலில் வெறும் நட்பாக […]

You May Like