திரையுலகில் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக மாமன்னன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி பருவத்தில் இருக்கும் ஒருவரை காதலித்து வருவதாகவும், இரு வீட்டார் சம்மதத்துடன் இன்னும் சில ஆண்டுகளில் திருமணம் நடைபெற போவதாகவும் ஏற்கனவே தகவல் கசிந்தது.

ஆனால், இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் இதுவரை வெளிவரவில்லை. கீர்த்தி சுரேஷின் திருமணம் மற்றும் காதல் குறித்து தொடர்ந்து சில சர்ச்சைகள் எழுந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில், கீர்த்தி சுரேஷுடன் நெருக்கமாக நபர் ஒருவர் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள், இவர் தான் கீர்த்தி சுரேஷின் காதலர் என கூறி வருகின்றனர்.
ஆனால், அவர் கீர்த்தியின் காதலர் இல்லை நண்பர் என தற்போது தெரியவந்துள்ளது. ஆனாலும், சர்ச்சைக்குரிய வகையில் இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.