நடிகர் விஜய்க்கும் அவரின் தந்தைக்கும் இடையே சிறு சிறு முரண்பாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. ஆரம்பத்தில் விஜய் சினிமாவில் நடிப்பதில் எஸ்ஏசிக்கு விருப்பம் இல்லை. ஆனால், விஜய் பிடிவாதமாக இருந்ததால், அவரை சினிமாவில் நடிக்க அனுமதித்திருந்தார்.
இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால், விஜய் இன்று உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணமே அவரின் தந்தை தான். விஜய் சினிமாவில் நுழைந்த நாளிலிருந்து அவருக்கு பல வகையிலும் உறுதுணையாக இருந்து வந்தார் எஸ்.ஏ.சி. ஆனாலும், விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையே சமீபகாலமாக மனஸ்தாபம் ஏற்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் அடிக்கடி பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு எஸ்.ஏ.சிக்கு அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், “கடந்த இரண்டு மாத காலமாக தனக்கு உடல்நிலை சரி இல்லாமல் இருந்ததாகவும், பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்யுமாறு கூறியதாகவும், இதனைத் தொடர்ந்து தற்போது அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும்” தெரிவித்துள்ளார்.
எஸ்.ஏ.சி. இவ்வாறு கூறியதைக் கேட்ட ரசிகர்கள் விஜய்யை திட்டித் தீர்க்கத் தொடங்கி விட்டனர். அதாவது, நேற்று தான் விஜய் அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு திரும்பியுள்ளார். எனவே, அறுவை சிகிச்சை செய்த தந்தையை அவர் இன்னமும் பார்க்கவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகியுள்ளது. ஆயிரம் தான் கோபம் இருந்தாலும் தந்தையை ஆபத்தில் போய் பார்க்காதவன் ஒரு சிறந்த மகனா எனக் கேட்டு விஜய்யை விளாசி வருகின்றனர்.