fbpx

15 நாட்களில் கணவரை மாற்றும் சன் டிவி சீரியல் நடிகை..!! கள்ள உறவை அம்பலப்படுத்திய 2-வது கணவர்..!!

சிலர் தற்போது விளம்பரத்திற்காகவே திருமணம் நடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அப்படி திருமணம் செய்தால் எவ்வளவு நாளைக்கு நீடிக்கும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. சமீபகாலமாக வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்களின் விவாகரத்துச் செய்தி அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. இது ஒரு புறம் இருக்க சமரசமாக இருவரும் பிரிந்தால் இருவருக்குமே நல்லது. ஆனால், சண்டை போட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் கூறி வருகின்றனர். இதனாலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அப்படி இப்போது ஒரு பிரச்சனை இணையத்தில் பூதாகரமாக போய்க்கொண்டிருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சன் டிவி சீரியல் நடிகையான திவ்யா, நடிகர் அர்னவ் மீது குற்றச்சாட்டு வைத்திருந்தார். அதாவது தன்னை திருமணம் செய்து கொண்டு வேறு ஒரு சீரியல் நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும், கர்ப்பமாக இருக்கும் என்னை துன்புறுத்துவதாகவும் குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார். இதனால் அர்னவ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.

மேலும் சமீபத்தில் தனது இரண்டு மாத கைக்குழந்தையுடன் திவ்யா படப்பிடிப்புக்கு வந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. இப்போது அர்னவ் திவ்யாவை பற்றி சில விஷயங்களை வெளியிட்டு இருக்கிறார். அதாவது திவ்யாவை பொருத்தவரையில் ஒரு ஆணுடன் 15 நாட்கள் மட்டுமே வாழ்வார். முதல் கணவருடன் 15 நாட்கள், என்னுடன் 15 நாட்கள் மட்டுமே குடும்பம் நடத்தினார். என்னுடன் வாழும்போது வேறு ஒருவர் உடன் திவ்யா கள்ளத்தொடர்பில் இருந்ததாக அர்னவ் பகீர் கிளப்பியுள்ளார். ஆனால், வெளியில் நான் கெட்டவன் போல திவ்யா சித்தரித்து உள்ளார்.

இவ்வாறு திவ்யா மீது அடுக்கடுக்கான புகார்களை அர்னவ் வெளியிட்டு இருந்தார். இவ்வாறு சமூக வலைத்தளங்களில் ஒருவரை ஒருவர் அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பார்க்க ரசிகர்களும் ஆர்வமாக இருப்பதால் யூடியூப் சேனலுக்கு தீனி போட்டது போல் இவர்களை மாறி மாறி பேட்டி எடுத்து வருகிறார்கள்.

Chella

Next Post

Cook with Comali 4..!! சிவாங்கிக்கு சொம்பு தூக்கும் CWC..!! கடுப்பான வெங்கடேஷ் பட்..!!

Tue Jun 6 , 2023
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவாங்கி நேரடியாக பைனலுக்கு தேர்வாகி உள்ளதால், சமைக்கவே தெரியாதவர் எப்படி பைனலுக்கு வந்தார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதுவரை 3 சீசன்கள் முடிந்த நிலையில், நான்காவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த முறை 10 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். கடந்த 3 சீசனில் கோமாளியாக இருந்த ஷிவாங்கி இந்த […]
Cook with Comali 4..!! சிவாங்கிக்கு சொம்பு தூக்கும் CWC..!! கடுப்பான வெங்கடேஷ் பட்..!!

You May Like