fbpx

சன் டிவி சீரியல் பாதியிலேயே நிறுத்தம்..!! கடுப்பான கதாநாயகன்..!! என்ன காரணம்..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் ‘தாலாட்டு’. இந்த சீரியலில் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க, சுருதி ராஜ் ஹீரோயினாக நடித்து வந்தார். சிலரின் சூழ்ச்சியால் பிரியும் தாயும் – பிள்ளையையும் , பின்னர் ஒரு கட்டத்தில் சந்திக்க, இருவரும் சேர்ந்த பின்னரும், என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்பதே இந்த சீரியலின் கதை.

இந்த சீரியல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்த சீரியல் திடீரென பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இது சீரியலை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ள நிலையில், திடீர் என சீரியல் நிறுத்தப்பட்டது குறித்து, சீரியலின் நாயகன் கிருஷ்ணா கோபமாக தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

சீரியல் குழுவினர் வரும் ஆகஸ்ட் மாதம் வரை நிச்சயம் சீரியல் ஓடும் என முதலில் கூறி இருந்தார்கள். ஆனால், இப்போது திடீரென முடித்துவிட்டனர். இதற்கு என்ன காரணம் என்பதை கூட தங்களிடம் முறையாக கூறவில்லை. எனவே, நிறைவு செய்யப்படாமல் சீரியலை பாதியில் நிறுத்த என்ன காரணம் என எங்களுக்கே தெரியவில்லை என கூறியுள்ளார். அடுத்தடுத்து பல புது சீரியல்கள், ஒளிபரப்ப தயாராக இருப்பதாக கூறுகிறார்கள். மற்ற சீரியல்களை ஒளிபரப்ப தான் இப்படி பாதியிலேயே ‘தாலாட்டு’ சீரியல் முடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது என்று காட்டமாக கூறியுள்ளார்.

Chella

Next Post

பஸ் டிக்கெட்டை விட விலை கம்மி - வந்தே பாரத் ரயில் டிக்கெட்..!

Sat Jul 1 , 2023
தமிழகத்தின் மூன்றாவது வந்தே பாரத் ரயிலாகச் சென்னையிலிருந்து நெல்லை வரை புதிய ரூட்டில் ரயில் இயக்கப்படும் என்ற தகவல் உறுதியாகி உள்ள நிலையில் தற்போது அந்த ரயிலுக்கான டிக்கெட் விலை விபரங்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் வரிசையாக ஒவ்வொரு புதிய ரூட்டிலும் வந்தே பாரத் ரயிலை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில் தான் இந்தியாவிலேயே மிக வேகமாகச் செல்லக்கூடிய ரயிலாக இருக்கிறது. மணிக்கு 160 […]

You May Like