fbpx

’Oh My Ghost’ படத்தில் நடிக்க சன்னி லியோனுக்கு..! இயக்குனர் சொன்ன சுவாரஸ்ய தகவல்..!

’ஓ மை கோஸ்ட்’ படத்தில் நடிக்க சன்னி லியோனுக்கு தமிழ் பயிற்சி அளிக்கப்பட்டதாக இயக்குநர் ஆர்.யுவன் தெரிவித்துள்ளார்.

சன்னி லியோன் ஹீரோயினாக நடித்து தமிழில் விரைவில் வெளியாக உள்ள படம் ’ஓ மை கோஸ்ட்’. வா மீடியா எண்டர்டெய்ன்மெண்ட் – ஒய்ட் ஹார்ஸ் ஸ்டுடியோ தயாரித்து, ஆர்.யுவன் இயக்கியுள்ள இப்படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், சதீஷ், தர்ஷா குப்தா, ரவி மரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வரலாற்றுப் பின்னணியில் திகில் மற்றும் நகைச்சுவை ஜானரில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. முன்னதாக இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

’Oh My Ghost’ படத்தில் நடிக்க சன்னி லியோனுக்கு..! இயக்குனர் சொன்ன சுவாரஸ்ய தகவல்..!

மாயசேனா என்ற மகாராணியாக சன்னி லியோன் இப்படத்தில் நடித்துள்ள நிலையில், வரலாற்றுப் பின்னணியில் அமைந்துள்ள இப்படத்தில் நடிக்க சன்னி லியோனுக்கு தமிழ் பயிற்சி அளிக்கப்பட்டதாக இயக்குநர் ஆர்.யுவன் தெரிவித்துள்ளார். சன்னி லியோனுக்காகவே படப்பிடிப்பு மும்பையில் நடத்தப்பட்டதாகவும், படத்தில் காமெடி காட்சிகள் அதிகம் நிரம்பி இருக்கும் என்றும் இயக்குநர் தெரிவித்துள்ளார். முன்னதாக தன்னுடன் நடிக்க இன்னும் திரையுலகில் சிலர் தயங்குவதாக சன்னி லியோன் வருத்தம் தெரிவித்திருந்தார்.

’Oh My Ghost’ படத்தில் நடிக்க சன்னி லியோனுக்கு..! இயக்குனர் சொன்ன சுவாரஸ்ய தகவல்..!

கனடாவில் பிறந்த பஞ்சாபி பெண்ணான சன்னி லியோன், ஆபாசப் பட உலகில் இருந்து வெளியேறி இந்தியத் திரையுலகில் கவனம் செலுத்த தொடங்கினார். கடந்த 2012ஆம் ஆண்டு பூஜா பட்டின் ஜிஸ்ம் 2 மூலம் தனது பாலிவுட் பயணத்தை தொடங்கினார். தற்போது திரையுலகில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள சன்னி லியோன் இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கும் படத்தில் முன்னதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்காக அனுராக்குக்கு நன்றி தெரிவித்துள்ள சன்னி லியோன், ”இன்னும் திரையுலகில் சிலர் என்னுடன் பணியாற்றத் தயங்குகிறார்கள் என்றும், இவர்களுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கலாம் என்று நான் நம்புகிறேன். மேலும் இந்த படத்திற்காக ஆடிஷன் செய்ய அனுமதித்த அனுராக் மற்றும் அவரது குழுவினருக்கு நன்றி. இது வாழ்க்கையை மாற்றும் சரியான தருணம். அனுராக் போன்ற ஒரு இயக்குனருடன் பணிபுரிவது எனது கரியரின் முழு இயக்கத்தையும் மாற்றும் என்று நான் நம்புகிறேன்” என மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

Chella

Next Post

இனி சுங்கச்சாவடிகளே இருக்காது.. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சொன்ன குட்நியூஸ்...

Tue Sep 13 , 2022
எதிர்காலத்தில் சுங்கச் சாவடிகளே இல்லாத வகையில் புதிய திட்டத்தை கொண்டு வரவுள்ளதாக மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 19வது இந்திய – அமெரிக்க பொருளாதார மாநாட்டை மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்.. அப்போது பேசிய அவர் “மத்திய போக்குவரத்துத் துறை ஒரு முன்னோடி திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது. கட்டணம் செலுத்துவதற்காக சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் நிறுத்தாமல் செல்வதற்காக ‘தானியங்கி […]

You May Like