தேசிய சினிமா தினத்தைக் கொண்டாடும் விதமாக மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (MAI) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பில், தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு வரும் செப்டம்பர் 16ஆம் தேதி மட்டும் நாடு முழுவதும் உள்ள மல்டிபிளக்ஸ்களின் சுமார் 4,000 ஸ்க்ரீன்களுக்கு டிக்கெட் கட்டணமாக ரூ.75 மட்டும் வசூலிக்கப்படும் என இந்திய மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் தெரிவித்துள்ளது. இதில் PVR, INOX, CINEPOLIS, CARNIVAL, MIRAJ, CITYPRIDE, ASIAN, MUKTA A2, MOVIE TIME, WAVE, M2K போன்ற திரையரங்கு குழுமங்களும் அடங்கும்.
![சூப்பர் அறிவிப்பு..!! இந்த ஒரு நாள் மட்டும் சினிமா டிக்கெட்டின் விலை ரூ.75..!](https://1newsnation.com/wp-content/uploads/2022/09/Cinema-1024x658.jpg)
”2022இல் வெளியான கேஜிஎஃப், ஆர்.ஆர்.ஆர், விக்ரம் மற்றும் பூல் புலாயா 2 ஆகிய படங்களின் வெற்றியை அங்கீகரிக்க இந்த முடிவை எடுத்துள்ளனர். சினிமாவை கொண்டாடும் ரசிகர்களுக்கு இது சமர்பணம், அவர்களால்தான் இந்த மாபெரும் வெற்றி கிடைத்தது. இந்த சினிமா தினம் அனைத்து வயது மக்களையும் ஒன்றிணைக்கும் திருவிழாவாகும். இந்தியாவில் பாலிவுட் திரை மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழியில் நூற்றுக்கணக்கான படங்கள் வெளிவந்து கொண்டு இருக்கிறது. சினிமா ஆப்ரேட்டர்கள் அனைவரும் இந்த வெற்றியினை கண்டு வியந்தனர். இந்த ஆண்டின் துவக்கத்தில் கேஜிஎஃப், ஆர் ஆர் ஆர், விக்ரம் மற்றும் பூல் புலாயா 2 ஆகிய படங்களுடன் ஹாலிவுட் படமான டாக்டர் ஸ்ட்ரேஞ், மாவெரிக் போன்ற படங்களும் நன்றாக வசூல் செய்தது. இது தொடர்பான விரிவான தகவல்கள் அனைத்தும், தியேட்டர்களின் வலைதளத்திலும், சோஷியல் மீடியாக்களிலும் வெளியாகும். #நேஷனல்சினிமாடே என்ற ஹாஷ்டாகை தொடர்ந்தால் பல தகவல்கள் கிடைக்கும்.” என்ற தகவலை வெளியிட்டுள்ளனர்.