fbpx

சுதா கொங்காரா இயக்கும் சூர்யாவின் 43-வது படத்தின் சூப்பர் அப்டேட்..!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

சூர்யா – 43 படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, அவரின் 43-வது படத்தை இயக்குநர் சுதா கொங்காரா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. முன்னதாக, சுதா கொங்காரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூர்யா வென்றிருந்தார்.

இந்நிலையில், மீண்டும் இந்த கூட்டணி இணைய உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், சூர்யா – 43 படத்தில் நடிகர் துல்கர் சல்மான், நடிகை நஸ்ரியா ஆகியோர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. தற்போது, இப்படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடிக்க பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவிடம் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய் வர்மாவும் நடிகை தமன்னாவும் காதலித்து வருவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

பிரபல பாலிவுட் நடிகர் புற்றுநோய் காரணமாக காலமானார்..! திரையுலகினர் அஞ்சலி..!

Thu Sep 14 , 2023
சக் தே இந்தியா, ஹாப்பி நியூ இயர், தில் சாஹ்தா ஹை போன்ற படங்களில் நடித்த பாலிவுட் நடிகர் ரியோ கபாடியா இன்று காலமானார். அவரது திடீர் மறைவு ஒட்டுமொத்தத் திரைத் துறையையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவர் சமீபத்தில் அமேசான் பிரைம் வீடியோ தொடரான “மேட் இன் ஹெவன் சீசன் 2” இல் மிருணால் தாக்கூரின் தந்தையாக நடித்திருந்தார், இதில் ரியோ கபாடியா நடிப்பில் கவர்ந்தார். இவர் மிகப் பெரிய பாலிவுட் […]

You May Like