சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது ஜெயிலர் திரைப்படம். மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். பீஸ்ட் படத்தில் வாங்கிய அடியை ஜெயிலர் மூலம் திருப்பி கொடுக்க வேண்டுமென நெல்சனும், 2 படங்களில் சறுக்கியதை இதன் மூலம் சரி செய்ய வேண்டும் என்ற தீவிரத்தில் ரஜினிகாந்த்தும் பணியாற்றியிருக்கின்றனர்.
2 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியின் படம் ரிலீஸ் ஆவதால், அவரது ரசிகர்கள் இதனை ஒரு திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். படத்துக்கு பெரும்பாலானோர் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். ஆனால், சிலரோ நெகட்டிவ் விமர்சனத்தையும் முன்வைத்து வருகின்றனர். அதாவது, ஜெயிலர் படத்தின் திரைக்கதை மோசமாக இருக்கிறது. கதையில் ஆங்காங்கே சொதப்பல் உள்ளது. டார்க் காமெடி ஒர்க் அவுட் ஆகவே இல்லை. முதல் பாதி பரவாயில்லை. இரண்டாம் பாதி மோசம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்தை மனதில் வைத்துக்கொண்டு விஜய் ரசிகர்கள் வேண்டுமென்றே ஜெயிலர் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனத்தை பரப்பி வருகின்றனர். ஜெயிலர் படம் நல்லா இல்லை என்று சொல்பவர்களின் டிபியை பார்த்தால் அதில் விஜய்தான் இருக்கிறார். இதை வைத்தே அவர்கள் விஜய் ரசிகர்கள் என்பதை உறுதி செய்துகொள்ளலாம் என ரஜினி ரசிகர்கள் கமெண்ட்ஸில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.