இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 42 என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பேண்டஸி கதையம்சம் கொண்ட படமாக தயாராகி வரும் இதில், நடிகர் சூர்யா பல்வேறு கெட் அப்களில் நடித்து வருகிறார். தற்போது சூர்யா நடிக்கும் பீரியாடிக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றது. நடிகர் சூர்யாவின் கெரியரில் இது பிரம்மாண்ட பட்ஜெட் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் அப்டேட்டுகளை தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார்.
பத்து தல படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அப்போது சூர்யா 42 படம் குறித்த அடுக்கடுக்கான அப்டேட்டுகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, நடிகர் சூர்யா இதற்கு முன் பண்ணிய படங்களை விட இப்படம் 3 மடங்கு அதிக பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இந்த விஷயம் சூர்யாவுக்கு தெரிந்தால் பயப்படுவார் என்பதால் அவரிடம் இதனை சொல்லவில்லை என ஞானவேல்ராஜா கூறினார். சூர்யா 42 படம் இந்த அளவுக்கு பிரம்மாண்டமாக எடுக்கப்படுகிறது என்றால் அதற்கு ராஜமவுலி தான் காரணம். இப்படத்தின் டீசர் ரெடியாக உள்ளதாகவும், வருகிற மே மாதம் டீசரை வெளியிடுவோம் என்றும் அறிவித்துள்ளார். அதேபோல் இப்படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என ஞானவேல் ராஜா அறிவித்துள்ளார்.