fbpx

10 மொழிகளில் வெளியாகும் சூர்யாவின்..! படப்பிடிப்பு இன்று துவக்கம்..?

நடிகர் சூர்யா – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை 10 மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாகவே நடிகர் சூர்யா – சிறுத்தை சிவா கூட்டணி பற்றி தான் கோலிவுட் முழுக்க பேச்சாக இருந்தது. அண்ணாத்த படத்தை இயக்கிய இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் புதிய படம் ஒன்றை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்த அறிவிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வந்த நிலையில், சில காரணங்களால் இப்படம் தள்ளிப்போனது. இப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் இருந்த நிலையில், அதற்குப் பதில் அளிக்கும் விதமாக நேற்று (ஆகஸ்ட் 22) சூர்யா – சிறுத்தை சிவா படத்தின் பூஜை நடைபெற்றது.

10 மொழிகளில் வெளியாகும் சூர்யாவின்..! படப்பிடிப்பு இன்று துவக்கம்..?

இயக்குனர் சிறுத்தை சிவாவின் கனவுப் படம் எனக் கூறப்படும் இப்படம் 2 பாகங்களாகவும் 10 மொழிகளில் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.சென்னை மற்றும் கோவா உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தை யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இப்படத்தில் முதல் முறையாக சூர்யாவுக்கு ஜோடியாக இந்தி நடிகை ‘திஷா பதானி’ நடிக்க இருக்கிறார். இசையமைப்பாள ‘தேவி ஸ்ரீ பிரசாத்’ இப்படத்திற்கு இசை அமைக்கிறார். மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

Chella

Next Post

#Breaking : தமிழக கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும்.. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...

Mon Aug 22 , 2022
தமிழக கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.. தமிழகத்தில் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு அறநிலையத்துறை புதிய விதிகள் கொண்டு வரப்பட்டன.. அதன்படி 18 வயது முதல் 25 வயதுடையவர்கள் மட்டுமே அர்ச்சராக நியமிக்கலாம் என்றும், ஆகம பள்ளிகள் ஓராண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.. இந்த […]
’ஒவ்வொரு துறை செயலாளரும் நீதிமன்றத்தில் ஆஜராகும் நிலை ஏற்படும்’..! நீதிபதிகள் எச்சரிக்கை

You May Like