வாடகைத்தாய் சட்டத்தால் பிரபல ஜோடியான விக்கி-நயனுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என சட்ட வல்லுனர்கள் அடித்து கூறுகின்றனர்.
வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றுக்கொண்டதாக நேற்று முன்தினம் விக்கி நயன் தம்பதியினர் சமூக வலைத்தலம் மூலமாக தகவல் வெளியிட்டனர். இதையடுத்து ஒரு புறம் ரசிகர்களின் வாழ்த்துக்கள் மழையில் தம்பதியினர் நனைந்து வரும் நிலையில் , எங்கிருந்தோ திடீரென ஒரு புயல் வீசத்தொடங்கியது.
நயன்-விக்கி வாடகைத்தாய் வைத்து குழந்தை பெற்றுக்கொண்டது சட்ப்படி குற்றம் என்பதுதான் அந்த புயல்.. இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியபோது இருவரிடமும் விளக்கம் கேட்கப்படும் என தெரிவித்தார். அதற்குள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதுபற்றி ஏராளமான கிசுகிசுக்கள் வலம் வந்தன. ஆனால் இதுவரை இது தொடர்பாக விளக்கம் பற்றி தம்பதியினர் வாய் திறக்கவில்லை. இந்நிலையில்சமூக வலைத்தலங்களில் இந்த விஷயத்தை வறுத்துக்கொண்டிருக்கின்றார்கள்.
இதனிடையே ஒரு தரப்பு சட்டத்தை மீறவில்லை என கூறுகின்றனர். இது தொடர்பாக சட்ட வல்லுனர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை என்பதுதான் சட்ட வல்லுனர்களின் ஒட்டு மொத்த கருத்தாகும். ஜனவரி மாதம் 25ம் தேதி வாடகைத்தாய் சட்டம் பற்றிய அறிவிப்பு வந்தது. அந்த சட்ட விதிகள் அமலுக்கு வந்தது ஜூன் 26-ம் தேதிதான். விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி முன்பே இதற்கான நடைமுறைகளை மேற்கொண்டுவிட்டதால் சட்டத்தை காரணம் காட்ட முடியாது என்கின்றனர். எனவே இந்த விஷயத்தை பெரிதுபடுத்தும் அவசியம் இல்லை எனவும் கூறுகின்றனர்.