தமிழ் சினிமாவில் முன்னணி வில்லனாக வலம் வந்தவர் தான் மன்சூர் அலிகான். கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட பல படங்களில் விஜயகாந்துக்கு வில்லனாக நடித்து பிரபலமானார். இவர், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.
அதில், ரசிகர் ஒருவர் ஸ்டேஜிலேயே க்ளிசெரின் போடாமல் அழுவீங்களான்னு கேட்க, நானெல்லாம் சினிமாவில் டிப்ளோமா வாங்கிட்டு நடிக்க வந்தவன், அழுகை சீன் என்று சொன்னால், க்ளிசரின் எல்லாம் போட்டுக் கொண்டு கண்ணை வீணாக்க மாட்டேன் என்றார். தொடர்ந்து பேசிய அவரிடம், அப்போதெல்லாம் நடிகைகளின் ஆடைகளை உருவி அத்துமீறி நடிக்கும் காட்சிகளை எப்படி படமாக்குவாங்கன்னு கேட்ட ஒரு ரசிகருக்கு ரம்யா கிருஷ்ணன், வினிதா என பல ஹீரோயின்களுடன் அதுபோன்ற சீன்களில் நடிச்சிருக்கேன்.
சேலையை உருவி, அப்படியே பெட்ல தூக்கிப் போடுவேன். அப்போதெல்லாம் ரீல் தானே. ஒரே டேக்கில் ஓகே ஆகாது. ஒரு டேக்கில் ஓகே ஆகவில்லை என்றால் உங்களுக்கு ஹேப்பி, டைரக்டர் வந்து சீனை ஒழுங்கா நடிம்மான்னு திட்டுவார். அந்த சீன் முடிந்தவுடன், மன்னிச்சிடு தங்கச்சின்னு சொல்லிட்டு போயிடுவேன் என பதில் அளித்துள்ளார்.