கடந்த 2018ஆம் ஆண்டு ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ தொடரின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, இதன் இரண்டாம் பாகம் நான்கு கதைகளை கொண்ட ஆந்தாலஜி கதையாக வெளியாகி உள்ளது. இந்த வெப்தொடரில் மிருணாள் தாகூர், தமன்னா, காஜல் ஆகியோர் நடித்துள்ளனார். இதில், படுக்கையறை காட்சிகள் மிகவும் ஆபாசமாக இருப்பதாக பலரும் விமர்சனம் எழுந்து வருகிறது.
இந்நிலையில், நடிகை தமன்னா அண்மையில் அளித்துள்ள பேட்டியில், லஸ்ட் ஸ்டேரிஸ் 2-ல் நான் நடித்த காட்சிகள் பேசுபொருளாக மாறியுள்ளது. என்னைப் பொறுத்தவரை நான் ஒரு நடிகையாக என் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளேன். மேலும், லஸ்ட் ஸ்டோரிஸ் 2 காட்சிகளை எனது குடும்பத்துடன் பார்த்த போது மிகவும் சிரமப்பட்டேன். படபடப்புடன் அசவுகரியமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன்.
ஆனால், நான் ஒரு நடிகையாக மகிழ்ச்சி அடைகிறேன். செக்ஸ் பற்றிய புரிதல் அனைவருக்கும் தெரிய வேண்டும். செக்ஸ் பற்றி பேசுவதை கூறினார். லஸ்ட் ஸ்டோரிஸ்-2வை ரசிகர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் பார்க்க வேண்டும் என்று தமன்னா அந்த பேட்டியில் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.