இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழில் கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிய தமன்னா, பின்னர் முன்னனி ஹீரோக்களுக்கு ஜோடியாக பல வெற்றிப் படங்களில் நடித்தார். இவர், தற்பொழுது தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற வெப் தொடர் பல சர்ச்சைகளை கிளப்பியது.
இந்நிலையில், நடிகை தமன்னாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்ற தகவல் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அதாவது தமன்னா பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக்கை திருமணம் செய்து கொண்டுள்ளதாக இணையதளங்களில் புகைப்படங்கள் பரவி வருகின்றன. சமீபத்தில் இதுகுறித்து அவரிடம் கேட்டபொழுது அவர் சிரித்தபடியே ‘அவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டது.
2 குழந்தைகளுக்கு தந்தையாக அவர் உள்ளார். இதனால் அப்துல் ரசாக்குடன் திருமணம் என்ற கேள்வி எழ வேண்டாம்’ என்று கூறியுள்ளார். ஆனால், இவர் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படும் செய்தி, இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனால், அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.