நடிகை தமன்னாவும், பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், இதுவரை தங்களது காதலை வெளிப்படையாக உறுதி செய்யாமலேயே இருந்து வந்தனர். ஆனால், சமீபத்தில் தான் இருவரும் காதலிப்பதை உறுதி செய்தனர். இந்நிலையில், தற்போது இவர்கள் இருவர் குறித்தும் ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, ப்ரோமோஷனுக்காக மட்டுமே தமன்னாவை விஜய் பயன்படுத்துகிறார் என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். சமீபகாலமாக தமன்னா நடிப்பில் வெளியாகும் படங்களின் ப்ரோமோஷன் நிகழ்வுகளுக்கு மட்டுமே இருவரும் ஜோடியாக சென்று வருவதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அதுமட்டுமின்றி, தற்போது தமன்னா நடிப்பில் ஆக்ரி சாக் வெப் தொடர் வெளியாகவுள்ளது. இதற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சிக்கும் தமன்னாவும் விஜய்யும் ஜோடியாக கலந்து கொண்டனர். எனவே, தமன்னாவை ப்மோஷனுக்காக மட்டுமே பயன்படுத்தி வரும் விஜய், அவரை திருமணம் செய்து கொள்வாரா என்ற சந்தேகம் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.