fbpx

ரசிகர்களை வெகுவாக கவர்ந்த தமிழ் ‘டைம் டிராவல்’ திரைப்படங்கள்..!! நீங்களும் மிஸ் பண்ணிடாதீங்க..!!

தமிழில் பல டைம் ட்ராவல் திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த படங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

24

கடந்த 2016ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் 24. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து சமந்தா, நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தை எழுதி இயக்கியவர் விக்ரம் குமார். டைம் ட்ராவல் சம்பந்தப்பட்ட படமாக இருந்தாலும் இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இன்று நேற்று நாளை

கடந்த 2015இல் வெளியான இன்று நேற்று நாளை திரைப்படமும் டைம் ட்ராவல் படம் தான். இந்த படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்க அவருடன் மியா ஜார்ஜ் நாயகியாக நடித்திருந்தார். இப்படத்தை ஆர்.ரவிக்குமார் எழுதி இயக்க, ஹிப் ஹாப் தமிழா இசை அமைத்திருந்தார். இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

டிக்கிலோனா

இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கிய டிக்கிலோனா திரைப்படம் டைம் ட்ராவல் சம்பந்தப்பட்ட படம். இப்படத்தில் சந்தானம், அனகா, யோகி பாபு போன்ற பலரும் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம், காமெடி கலந்த படமாக இருந்தாலும் ரசிகர்களிடையே போதிய வரவேற்பு பெறவில்லை. யுவனின் இசை மட்டுமே இந்த படத்திற்கு பக்க பலமாக இருந்தது.

கணம்

காமெடி, சயின்ஸ் பிக்சன், டைம் ட்ராவல் என்று எடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் டைம் ட்ராவல் கலந்த அம்மா சென்டிமென்ட் இணைந்து கலவையாக வெளியான திரைப்படம் கணம். அதற்கு காரணம் திரைக்கதையில் எந்த ஒரு தொய்வும் இல்லாதது மட்டுமில்லாமல் சென்டிமென்ட் இந்த படத்தில் நன்றாகவே ஒர்க் அவுட் ஆனது. இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் அமலாவுடன் இணைந்து, ஷர்வானந்த், ரிது வர்மா, ரமேஷ் திலக், சதீஷ் ஆகியோரும் படத்தில் நடித்துள்ளனர். விபத்தில் தன் அம்மாவை இழக்கும் ஷர்வானந்த் டைம் டிராவல் மூலம் தனது கடந்த காலத்திற்குச் சென்று தனது அம்மாவை காப்பாற்றுகிறாரா என்பதை சென்டிமென்ட் கலந்த எமோஷன் கதையாக இயக்கியுள்ளார் ஸ்ரீ கார்த்திக்.

ஜாங்கோ

இயக்குனர் மனோ கார்த்திகேயன் இக்கத்தில் சதீஷ் மற்றும் மிருநாளீனி ரவி நடித்த திரைப்படம் தான் ஜாங்கோ. இப்படம் டைம் ட்ராவல் மெஷினை வைத்து தனது மனைவியை மரணத்தில் இருந்து காப்பாற்ற நினைக்கும் கதை களத்தை கொண்டது. க்டந்த 2021இல் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

மாநாடு

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மாநாடு. டைம் லூப் என்ற சயின்ஸ் பிக்சன் கதையை மையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது. இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக அமைந்தது எஸ்.ஜே.சூர்யாவின் வில்லத்தனமான நடிப்புதான். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார்.

மார்க் ஆண்டனி

நடிகர் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கடந்த 15ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. டைம் ட்ராவல் மெஷினை வைத்து எடுக்கப்பட்ட திரைப்பட்டம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Chella

Next Post

13 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய இசை ஆசிரியர்....! பெற்றோர்கள் செய்த செயலால் கதறல்....!

Mon Sep 18 , 2023
பொதுவாக தற்போது பெண் பிள்ளைகளுக்கு சமூகத்தில் பாதுகாப்பு என்ற உணர்வே இல்லாமல் போய்விட்டது. பெண் பிள்ளைகள் கல்லூரியில் படித்தாலும் சரி பள்ளியில் படித்தாலும் சரி அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டியவர்களே அவர்களுக்கு எதிராக, பாலியல் உள்ளிட்ட சீண்டலில் ஈடுபடுவது வருத்தத்திற்குரிய செய்தியாக இருக்கிறது. அந்த வகையில், விழுப்புரம் பகுதியில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. விழுப்புரத்தில் பள்ளி ஆசிரியரே 13 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் […]

You May Like