fbpx

’மஞ்சள் வீரன்’ படத்திற்காக கோடிகளில் சம்பளம் வாங்கும் டிடிஎஃப் வாசன்..!! எத்தனை கோடி தெரியுமா..?

யூடியூப் அசுர வளர்ச்சி கண்டுள்ளதால், அதன் மூலம் சம்பாதிப்பவர்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளனர். யூடியூப் மூலம் பேமஸ் ஆன சிலர் சினிமாவிலும் காலடி எடுத்து வைத்து கலக்கி வருகின்றனர். குறிப்பாக யூடியூப்பில் ஸ்பூப் வீடியோ போட்டு பேமஸ் ஆன கோபி, சுதாகர் தற்போது படம் ஒன்றில் நடித்து வருகின்றனர். அதேபோல் யூடியூபர் எருமசாணி விஜய் முதலில் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த இவர், கடந்தாண்டு அருள்நிதி நடிப்பில் வெளிவந்த டி பிளாக் படம் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார்.

இதுதவிர புகழ்பெற்ற யூடியூபரான டியூடு விக்கி என்பவர் விரைவில் இயக்குனராக களமிறங்க உள்ளார். இவர் இயக்க உள்ள முதல் படத்தில் நடிகை நயன்தாரா தான் கதையின் நாயகியாக நடிக்க உள்ளாராம். இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படி யூடியூப் மூலம் பேமஸ் ஆகி சினிமாவில் காலடி எடுத்து வைத்த பிரபலங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இந்த லிஸ்ட்டில் புதிதாக இணைந்துள்ளவர் தான் டிடிஎப் வாசன்.

இவர் மஞ்சள் வீரன் என்கிற திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாக உள்ளார். இப்படத்தை செல்அம் என்பவர் இயக்க உள்ளார். இப்படத்திற்கான பூஜை அண்மையில் நடைபெற்றது. அதேபோல் புல்லட்டில் வீலிங் செய்தபடி வெளியான மஞ்சள் வீரன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், மஞ்சள் வீரன் படத்துக்காக டிடிஎப் வாசன் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, இப்படத்தில் நடிக்க அவருக்கு ரூ.1.8 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. யூடியூப் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்து வந்த டிடிஎப் வாசன் தற்போது சினிமாவில் முதல் படத்திலேயே கோடிகளில் சம்பளம் வாங்கும் தகவல் கோலிவுட்டில் ஹாட் டாப்பிக் ஆக மாறி உள்ளது.

Chella

Next Post

விபத்தில் சிக்கிய நடிகர் ஷாருக்கான்.?

Tue Jul 4 , 2023
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வந்த படப்பிடிப்பின்போது ஷாருக்கான் விபத்தில் சிக்கியதாகவும் அவரது மூக்கில் காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. தனியார் ஊடகம் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில் ஷாருக்கானுக்கு படப்பின்போது ஏற்பட்ட விபத்தில் அடிபட்டு மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியதாகவும், உடனடியாக அவர் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷாருக்கானுக்கு மூக்கில் சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு […]

You May Like