fbpx

Thalaivar 171 | உறுதியானது சூப்பர் ஸ்டார் ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணி..!! சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு..!!

நடிகர் ரஜினிகாந்தின் 171-வது படம் குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’, ‘லால்சலாம்’ படத்திற்கு பிறகு தனது 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ திரைப்படத்தை இயக்கிய ஞானவேல் இயக்குகிறார். இதனை அடுத்து ரஜினியின் 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார் எனத் தகவல் வெளியானது.

இந்நிலையில், இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ’ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் ரஜினிகாந்த்துடன் இணைகிறது. அனிருத் இசையில் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்குகிறார். ஆக்‌ஷன் காட்சிகளை அன்பறிவு செய்கிறார்கள். படத்தின் மற்ற தொழில்நுட்பக் குழு மற்றும் பிற நடிகர்களின் விவரங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

டேய் பரமா... இந்த வருஷமும் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க முடியாதா..? அதிரடி முடிவை எடுத்த முதலமைச்சர்..!!

Mon Sep 11 , 2023
நாட்டிலே காற்று மாசுபாடு அதிகம் நிறைந்த மாநிலமாக டெல்லி உள்ளது. உலகிலேயே மிகவும் மோசமாக காற்று மாசுபாடுள்ள நகரங்களில் டெல்லியும் ஒன்றாக இருப்பது மக்களை மிகவும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. டெல்லியில் மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக கடந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், இந்தாண்டும் தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்க முதலமைச்சர் […]

You May Like