தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. இவருக்கு மௌனம் பேசியதே படம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. தொடர்ந்து அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து தனது மார்க்கெட்டை உயர்த்தி கொண்டார் த்ரிஷா. தற்போது கூட விஜய்யின் லியோ மற்றும் ஒரு சில டாப் ஹீரோக்களின் படங்களில் கமிட் ஆகியுள்ளார். இப்படி பிஸியாக ஓடிக்கொண்டிருக்கும் த்ரிஷாவை பற்றி பிரபல சர்ச்சை நடிகை மீரா மிதுன் ஒரு தகவலை கூறியிருக்கிறார்.
நடிகையான மீரா மிதுன் பல்வேறு நடிகர்களின் படங்களில் முக்கிய மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட இவர், ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு கிடைக்காததால் தன்னுடன் நடித்த நடிகர் நடிகைகளை பற்றி பேசி வருகிறார். அந்தவகையில் நடிகை த்ரிஷாவை பற்றியும் பேசியிருக்கிறார்.
அதாவது, ”நான் த்ரிஷா நடித்துக் கொண்டிருந்த படம் ஒன்றில் சின்ன ரோலில் நடித்தேன். அப்போது அந்த செட்டில் த்ரிஷாவை தொடக்கூடாத இடத்தில் தொட்டு விளையாடிக் கொண்டிருந்தார் பிரபல நடிகர். அது பார்க்கவே அறுவெறுப்பாக இருந்தது. இது த்ரிஷாவுக்கு பிடிக்கவில்லை என்றால், அவரால் அப்போது ஒன்றும் செய்ய முடியவில்லை. கோபப்பட்டு கத்தி விட்டால் அந்த பட வாய்ப்பு போய்விடும் என்று பயந்து சகித்துக் கொண்டிருந்தார்.
முன்னணி நடிகைக்கே இப்படி ஒரு நிலைமை என்றால் என்னை போன்ற சாதாரண நடிகைகளை பற்றி யோசித்துப் பாருங்கள்” என்று மீரா மிதும் பேசியுள்ளார். இவர் சொன்னது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால், இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.