fbpx

விருதுகளை அள்ளிக்குவித்த ’Squid Game’ தொடர்..! மொத்தம் எத்தனை தெரியுமா?

74-வது ‘எம்மி விருது’ வழங்கும் விழாவில், ஸ்குவிட் கேம் தொடர் விருதுகளை அள்ளிக் குவித்துள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், எம்மி விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான இந்த எம்மி விருது, டிவி தொடர்கள் மற்றும் வெப் சீரிஸுக்காக மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு வழங்கப்பட்ட எம்மி விருதுகளில் 8 விருதுகளை வென்று அசத்திய ‘சக்ஸஷன்’ தொடர், இந்த முறையும் சிறந்த தொடருக்கான விருது உள்பட மொத்தம் 4 விருதுகளை வென்று மீண்டும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

விருதுகளை அள்ளிக்குவித்த ’Squid Game’ தொடர்..! மொத்தம் எத்தனை தெரியுமா?

அதே போல் சர்வதேச ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட பிரபல தென் கொரிய வெப்சீரீஸான ‘ஸ்குவிட் கேம்’ (Squid Game) 14 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், சிறந்த நடிகர் உள்பட 6 விருதுகளை வென்றுள்ளது. சிறந்த நடிகருக்கான விருது ஸ்குவிட் கேமில் நடித்த லீ ஜுங் ஜேவுக்கு லீ ஜங்-ஜேவுக்கு வழங்கப்பட்டது. மேலும் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட ‘ஸ்டேரஞ்சர் திங்ஸ்’ தொடர் மொத்தம் 5 விருதுகளை வென்று குவித்துள்ளது.

Chella

Next Post

பிரபல நடிகரை கன்னத்தில் அறைந்த பாதுகாவலர்..? விருது வழங்கும் நிகழ்ச்சியில் பரபரப்பு.. வைரல் வீடியோ..

Wed Sep 14 , 2022
பிரபல நடிகர் ரன்வீர் சிங் சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்ற SIIMA திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.. இந்த நிகழ்ச்சியில் மிகவும் விரும்பப்படும் இந்தி நடிகருக்கான விருது ரன்வீருக்கு வழங்கப்பட்டது. இருப்பினும், இந்த நிகழ்ச்சியில் அவரின் சொந்த மெய்ப்பாதுகாவலரே நடிகர் ரன்வீர் சிங்கை அறைந்ததாக கூறப்படுகிறது.. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ரன்வீர் சிங் SIIMA விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு சென்ற போது அவரின் […]

You May Like